இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 மாச்சு

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 மாச்சில் விரிவடைந்தன.

தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகால போக்கினைத் தொடர்ந்து தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 57.8 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தாலும், முன்னைய ஆண்டுகளைவிட  மெதுவான வீதத்திலேயே காணப்பட்டது. பருவகாலக் கேள்வியினைத் தொடர்ந்து உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் இவ்வதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 மாச்சில் 51.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் துறை முழுவதும் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. இதற்கு, புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் ஏதுவாகின.

முழுவடிவம்

Published Date: 

Monday, April 18, 2022