மூடீஸ் இன் தவறான நேரத்திலான, ஏற்றுக்கொள்ளமுடியாத தரப்படுத்தல் நடவடிக்கை பக்கச்சார்புக் கரிசனைகளை எழுப்புகின்றது

மூன்று மாதங்களுக்கு முன்னர் இதேவிதத்தில் தரம் குறைப்பதற்கான மீளாய்வின் கீழ் இடம்பெறச் செய்யப்பட்டதன் பின்னர் தரப்படுத்தல் நடவடிக்கைக்கு இட்டுச்சென்ற மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ் (மூடீஸ்) இன் அண்மைய கணிப்பீடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வலுவான அதிருப்தியினை வெளிப்படுத்துகின்றது. மீண்டுமொரு தடவை இலங்கை தொடர்பில் மூடீஸ் இன் நியாயப்படுத்த முடியாத தரப்படுத்தல் நடவடிக்கையானது 2022 இற்கான அரசாங்க வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்படுகின்ற முக்கிய நிகழ்வுக்கு முன்னர் சில நாட்களே உள்ள நிலையில்; வெளியிடப்பட்டுள்ளதுடன் இது, வெளிப்படையாகவே அவசரமானதும் வரவுசெலவுத்திட்டத்தின் தன்மையானது அரசாங்கத்தின் நிதியளித்தல் திட்டத்திற்கு பெருத்தமற்றது என்பது மூடீஸ் பகுப்பாய்வாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்பட்ட கருத்தான அத்தகைய பகுப்பாய்வாளர்களின் குறைவான புரிந்துணர்வினைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் சாதகமான அபிவிருத்திகள் மற்றும் எதிர்பார்க்கைகளை அவர்கள் முறைமைசார்ந்த விதத்தில் கவனிக்காது விட்டு, ஆயினும், இழப்புகளுடன் இணைந்த இடர்நேர்வுகளுக்கு அதிக அழுத்தத்தினை சாட்டுக்கின்ற அத்தகைய முகவராண்மைகளின் தீவிரமான ஆளுகைப் பலவீனங்களையும் இது பிரதிபலிக்கின்றது. மூடீஸ் இன் கணிப்பீடானது பல்வேறு வழிமுறைக;டாக நாட்டின் வெளிநாட்டு நிலையினை வலுப்படுத்துவதில் பிந்திய அபிவிருத்திகளைக் கருத்திலெடுக்கத் தவறியுள்ளது, அவற்றில் சில 2021 ஒத்தோபர் 26 அன்று இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டவாறு எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை ஏற்கனவே ஈட்டியுள்ளன. மேலும், “ஆளுகைப் பலவீனம்” மற்றும் “சவால்மிக்க உள்நாட்டு அரசியல் சூழ்நிலை” பற்றி அது கோருகின்ற போது சனநாயக ஏற்பாடொன்றினுள் சிறப்பாக தாபிக்கப்பட்ட அரசியல் உறுதிப்பாடு மீதான தரப்படுத்தல் முகவராண்மையின் அறியாமையினையே கணிப்பீடு வெளிப்படுத்துகின்றது அத்துடன் கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பல்வேறு இடர்பாடுகளின் போது இலங்கையுடன் கைகோர்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு எவ்வித துன்பங்களையும் தராது பாதகமான வெளிவாரி நிகழ்வுகளிலிருந்து மீட்சியடைகின்ற ஒரு நாட்டினால் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்களை உணரவில்லை என்பது தெட்டத்தெளிவானதாகும். 

2021 ஒத்தோபர் 01 அன்று இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட வழிகாட்டலில் எடுத்தியம்பப்பட்ட ஆறு மாத உபாயத்திற்கு மேலதிகமாக, மிகக் கிட்டிய காலத்தில் அடையப்படவுள்ள பல்வேறு இருபுடை மூலங்களுடன் இறுதிப்படுத்தப்பட்டு வருகின்ற நடுத்தர காலம் தொடக்கம் நீண்ட கால நிதியிடல் ஏற்பாடுகளை மூடீஸ் இன் கணிப்பானது அங்கீகரிக்கத் தவறியுள்ளது. இது, ஏனையவற்றுக்கு மத்தியில் பெற்றோலியப் பெறுகைக்காக இந்தியா மற்றும் மத்திய கிழக்கு இணைத்தரப்பு நாடுகளிடமிருந்து பல பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் தொடர் கடன்கள்; இருபுடை நீண்ட காலக் கடனாக மத்திய கிழக்கு நாடொன்றிடமிருந்து பாரிய வெளிநாட்டுச் செலாவணிக் கடனொன்றுக்கான ஏற்பாடு மற்றும் தற்போது மதிப்பீடுசெய்யப்பட்டு வருகின்ற கூட்டுக்கடன் ஏற்பாட்டுக்காகக் கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. இதற்கு மேலதிகமாக, அரசாங்கத்திற்கான உட்பாய்சல்களுடன் தொடர்புபட்ட ஏற்கனவே முன்னுரிமைப்படுத்தப்பட்டுக் காத்திருக்கும் கருத்திட்டக் கடனிலிருந்து கணிசமான தொகையினைக் கொண்ட நிதியங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு மத்திய வங்கிகளுடன் இருபுடை பரஸ்பர நாணயப் பரிமாற்றல் ஒப்பந்த உடன்படிக்கைகள் மீதான அண்மைய கலந்துரையாடல்களும் கிட்டிய காலத்தில் நாட்டிற்கு மேலதிக ஆதரவினை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

அத்தகைய காசுப்பாய்ச்சல்களை கருத்திற்கொள்ளாது, அரசாங்கத்தின் மீள்கொடுப்பனவு இயலளவு பற்றிய ஏதேனும் கணிப்பீடு பாரபட்சமானதாகவே அமைகின்றது. அத்தகைய பக்கச்சார்பான கணிப்பீட்டின் அடிப்படையிலமைந்த தரப்படுத்தல் நடவடிக்கை நியாயமற்றது என்பதுடன் கொவிட்-19 உலகளாவிய நோய்த்;தொற்றின் பாதகமான தாக்கங்களிலிருந்து இலங்கை வலுவாக மீண்டெழுவதனால் நாட்டின் எதிர்பார்க்கைகளுக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். பன்னாட்டுத் தரப்படுத்தல் முகவராண்மையொன்றின் மூலமான அத்தகைய நடவடிக்கை முதலீட்டாளர் சமூகத்திற்கான அதன் ஆலோசனையின் செல்லுபடியாகும்தன்மையினை கேள்விக்குறியாக்கும் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. எது எவ்வாறிருப்பினும், இலங்கையின் கடன் மீள் செலுத்தத் தவறுதல் பற்றிய கடுமையான இடர்நேர்வு தொடர்பில் மூடீஸ் இன் கோரலுக்கு மத்தியிலும் இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை முதிர்ச்சி வரையிலும் வைத்திருப்பதற்கான பன்னாட்டு முதலீட்டாளர்களின் தெரிவு மீண்டும் பிரதிபலிக்கப்படுவதனால் மீட்சியடைவதற்கான இலங்கையின் திட்டங்களில் அவர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது தெளிவாகத் தோன்றுகின்றது. 

பொருளாதார நடவடிக்கைகள் அண்மைய இயல்புநிலைக்குத் திரும்பலடைதல் மற்றும் நாட்டின் சுற்றுலாத் துறை மீட்சியடைகின்ற வலுவான சமிஞ்சைகளை ஏற்கனவே அனுபவிக்கின்றமை அத்துடன் குறைவாக உபயோகிக்கப்படுகின்ற உபாயமற்ற சொத்துக்களை பணமாக்குதல் உள்ளடங்கலாக படுகடனைத் தோற்றுவிக்காத வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை ஈட்டுகின்ற ஏனைய நடவடிக்கைகள் என்பனவற்றுடன் 2021 நவெம்பர் 12 அன்று சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் ஆண்டுக்கான அதன் வரவுசெலவுத்திட்டத்தினைத் தயாரிக்கும் செயன்முறையினை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. நாட்டின் செயலாற்றம் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பாதை பற்றி கருத்திலெடுத்து அதன் கணிப்பீட்டினை உருவாக்குவதற்கு மூடீஸ் அனைத்துத் தொடர்புடைய தகவல்களையும் பரிசீலனையில் கொள்ளவில்லை என வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காலத்திற்கு ஒவ்வாத இத்தீர்மானம் காண்பிக்கின்றது. அண்மைய காலத்திலிருந்து நடுத்தர காலத்தில் வெளிநாட்டுச் சவால்களை இல்லாதொழித்து அரசிறை சார்ந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய  கொள்கைசார்ந்த முயற்சிகளுக்கும் கட்டமைப்புசார்ந்த சீரமைப்புகளுக்குமான தொணியொன்றினை வரவுசெலவுத் திட்டம் ஏற்படுத்துவதனால் ஒரு நாட்டிற்கு வரவுசெலவுத் திட்டமென்பது மிக முக்கியமான கூற்று என்பதை சாதாரண மனிதரும் இனங்காண்பர். ஒதுக்கீட்டுக் சட்டமொன்றின் வடிவில் நிதியளிப்பதற்கான சட்டபூர்வமானதன்மை அரசிறைப் பாதையின் தெளிவான பணிப்புரையுடன் கூடிய அனைத்து வெளிநாட்டு நிதியளித்தல்களையும் உள்ளடக்குகின்றது. ஆகையினால், அதன் தரப்படுத்தல் நடவடிக்கையினை தீர்மானிப்பதில் வரவுசெலவுத்திட்ட அறிவிப்புடன் வெளியிடப்படவுள்ள இன்றியமையாத கருத்துக்களை கருத்திற்கொள்ளாது எதிர்வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு மூடீஸ் உரிய கவனம் செலுத்தத் தவறியமை வியப்பளிக்கின்றது.

கடந்த காலத்திலும் பல்வேறு சந்தர்ப்பத்தில் மூடீஸ் மூலமான இதனையொத்த தரப்படுத்தல் நடவடிக்கையினை இலங்கை அனுபவித்துள்ளதனால் மூடீஸ் இன் அத்தகைய நடவடிக்கை இலங்கைக்கு புதியதொன்றல்ல. எடுத்துக்காட்டாக கொவிட்-19 உலகளாவிய நோய்தொற்றுப் பரவல் தொடக்கத்தின் உடனடியாக அத்துடன் சீன அபிவிருத்தி வங்கியுடன் வெளிநாட்டு நாணய தவணை நிதியளித்தல் வசதியொன்றினை அரசாங்கம் கைச்சாத்திட்ட பின்னர் 2020 ஏப்பிறல் 17 அன்று மூடீஸ் இலங்கையின் தரத்தினைக் குறைப்பதற்கான மீளாய்வினை இடம்பெறச்செய்து உடனடியாக ஏற்பாட்டின் நடைமுறைப்படுத்தலைத் தடைப்படுத்தி நிதியக் கிடைப்பனவுகளைத் தாமதப்படுத்தியது.  2020 ஒத்தோபரில் நாட்டுக்கான பன்னாட்டு முறி முதிர்ச்சியின் சற்று முன்னர் 2020 செத்தெம்பர் 28 அன்று தரக் குறைப்பு செயற்படுத்தப்பட்டது. மேலும், 2021 யூலை 19 அன்று தரங்குறைத்தலுக்கான மீளாய்வின் கீழ் மூடீஸ் இலங்கையினை இடம்பெறச்செய்த வேளையில், இலங்கை மத்திய வங்கி பங்களாதே~; வங்கியுடன் பரஸ்பர நாணயப் பரிமாற்றல் ஒப்பந்தமொன்றினை இறுதிப்படுத்தியதுடன் முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறியொன்று மீள் கொடுப்பனவுசெய்யப்படும் தருவாயில் இருந்தது. அத்தகைய கேள்விக்குரிய நடவடிக்கையானது மூடீஸ் இன் நடவடிக்கைகள் பொருளாதாரக் கரிசனைகள் மூலமாக மாத்திரமா தூண்டப்படுகின்றன என்ற நம்பிக்கை சார்ந்த கரிசனைகளைத்  கேள்விகளை  தோற்றுவிக்கின்றன. 

இலங்கை அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகம் உள்ளடங்கலாக அனைத்து ஆர்வலர்;களுடனும் நெருங்கிப் பணியாற்றுகின்றன. அத்தகைய ஈடுபாடுகள் வரலாறு முழுவதும் செய்யப்பட்டதைப் போன்று அனைத்து எதிர்வருகின்ற படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தின் மீதும் முதலீட்டாளர்களிடமுள்ள எவையேனும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கு உதவியுள்ளன. 2021இன் முதல் அரையாண்டில் 8.0 சதவீதம் கொண்ட உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இலங்கைப் பொருளாதாரம் பரந்த அடிப்படையிலான மீட்சியினைக் கொண்ட வலுவான சமிக்ஞையினை எடுத்துக்காட்டியுள்ளது. தடுப்பு மருந்தேற்றல் நிகழ்ச்சித்திட்டம் இரண்டு தடுப்பு மருந்துகளுடனும் மக்கள்தொகையின் 60 சதவீதத்திற்கு மேலும் 30 வயதிற்கு மேற்பட்ட குடித்தொகையின்  அனேகமாக 100 சதவீதத்தினை உள்ளடக்கி முழுமையான வேகத்தில் முன்னேற்றமடைவதனூடாக 2022 இல் பொருளாதார நடவடிக்கையில் வலுவான மீளெழுச்சிக்கான நம்பிக்கையினை வழங்குகின்றது. சுற்றுலாத் துறையின் மீட்சியும் வணிகப் பொருள் ஏற்றுமதிகள், பணிகள் ஏற்றுமதிகள், தொழிலாளர் பணவனுப்பல்கள் அதேபோன்று உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகள் ஊடாக வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் பலனளித்தல் என்பவற்றுடன் நடுத்தர கால வளர்ச்சிப் பாதை உத்வேகமடைவதற்கு சாத்தியமுள்ளது. குறுகிய காலத்தில் வணிகப் பொருள் மற்றும் பணிகள் வர்த்தகச் செயலாற்றத்தை மேம்படுத்தியமை  மூடீஸ் இனால் எழுப்பப்பட்ட தவறாக இடம்பெற்ற அச்சங்களுக்கு மத்தியில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்தத்தை அடைந்து கொள்வதற்கான அதன் இயலுமையினைக் காண்பிக்கின்றது. நியாயமற்ற, குறிப்பாக உலகளாவிய நோய்த்தொற்றுக் காலத்தில் இயங்காத முறையியலொன்றின் அடிப்படையில் இலங்கையில் தரப்படுத்தலினைத் தரங்குறைப்பதன் மூலம் நாட்டின் இவ் உள்ளார்ந்தத்தை தடம்புறழச்செய்ய முயற்சிப்பதற்கு மூடீஸ் நாடுகின்றது என்பது மிகவும் ஏமாற்றமளிக்கின்றது. செலவீனத்தை சிக்கனப்படுத்துவதனூடாக அரசிறைத் திரட்டலை நோக்கிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இயல்புநிலை அடைவதுடன் அரசாங்க வருவாயில் படிப்படியான அதிகரிப்பிற்கு துணையளித்து இதனூடாக இறைப் பற்றாக்குறையினை ஒடுங்கச்செய்யும். இது மூடீஸ் மூலம் இனங்காணப்படாத நடவடிக்கையாகும். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிசார்பு மறுசீரமைப்புகள் மாறுதலடைதலின் போது சில சரிப்படுத்தல் செலவுகளுக்கு மத்தியில் நடுத்தர காலத்தில் உள்நாட்டு உற்பத்தி முன்னிலை வகிக்கும் ஏற்றுமதி நோக்கிலான பொருளாதாரமொன்றிற்கான அடித்தளத்தினை இட்டுள்ளது. அரசாங்கத்தின் அத்தகைய இயலுமையினையும் அர்ப்பணிப்பினையும் புறக்கணிக்கின்றமை மூடீஸ் இன் தவறானதான தகவல்களுடன் கூடிய முடிவுகளுக்கு வழிவகுத்துள்ளது. 

இப்பின்னணியில் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் அனைத்து எதிர்வரவுள்ள கடப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதனை பன்னாட்டு முதலீட்டாளர் சமூகம் உள்ளடங்கலாக அனைத்து ஆர்வலர்களுக்கும் அரசாங்கம் மீளவும் உறுதியளிக்கின்றது. முதலீட்டாளர்களுடனான நேரடி ஈடுபாட்டை இலங்கை அதிகாரிகள் வரவேற்பதுடன் வெளிவாரி முகவராண்மைகளின் அத்தகைய அடிப்படையற்ற அறிவிப்புக்களால் குழப்பமடையாது கிரமமான நேரடிக் கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

 

Published Date: 

Thursday, October 28, 2021