இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக திரு. அஜித் நிவாட் கப்ரால் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக திரு. அஜித் நிவாட் கப்ரால் 2021 செத்தெம்பர் 15, புதன்கிழமை அன்று கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கமைய, திரு. கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகத் தொழிற்படுவார்.

திரு. கப்ரால் 2006 யூலை தொடக்கம் 2015 சனவரி வரை இலங்கை மத்திய வங்கியின் 12 ஆவது ஆளுநராகப் பணியாற்றியவராவார். 2020 ஓகத்து 12 தொடக்கம் 2021 செத்தெம்பர் 13 வரையான காலப்பகுதியின் போது இவர் பணம் மற்றும் மூலதனச் சந்தைகள் மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்புக்கள் இராஜாங்க அமைச்சராகவிருந்தார். 

Published Date: 

Wednesday, September 15, 2021