ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் 2021 செத்தெம்பர் 15 ஆம் நாளன்று பதவியேற்ற பின்னரான ஆரம்ப அறிக்கை

மத்திய வங்கியினை மீண்டுமொரு முறை வழிநடாத்துவதனைப் பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதுடன் இப்பொறுப்பினை ஏற்பதில் சனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினையும் உறுதிப்பாட்டினையும் மிகவும் தாழ்மையுடன் நினைவு கூறுகின்றேன். ஆயிரக்கணக்கான எமது நாட்டு மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நல்வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படாது எனவும் பொருளாதாரம் தொடர்ந்து உறுதிப்பாட்டினை நோக்கி வழிநடத்தப்படும் எனவும் நான் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கின்றேன்.

மத்திய வங்கியில் உள்ள சிறந்த ஆளணியின் நெருக்கமான ஒத்துழைப்பினையும் அனைத்து ஆர்வலர்களிடமிருந்தும் ஆதரவையும் எதிர்பார்ப்பதோடு நான் அவர்களுடன் ஆரம்ப கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவுள்ளேன்.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, September 15, 2021