வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 யூலை

வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2021 யூலையில் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது. ஏற்றுமதிப் பொருட்களிலிருந்தான வருவாய்கள் ஓராண்டிற்கு முன்னைய காலப்பகுதியிலும் பார்க்க இம்மாத காலப்பகுதியில் அதிகரித்திருந்தாலும், இறக்குமதிகள் மீதான செலவினம் வேகமாக அதிகரித்தமையானது வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 2021 யூலையில் விரிவடையக் காரணமாக அமைந்தது. 2021 யூனில் அவதானிக்கப்பட்ட போக்கினைத் தொடர்ந்து யூலையிலும் தொழிலாளர் பணவனுப்பல்கள்; வீழ்ச்சியடைந்த வேளையில், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்தளவான மட்டங்களிலேயே காணப்பட்டன. அதேவேளை, படுகடன் பணிக் கொடுப்பனவுகளில் நாட்டின் அப்பழுக்கற்ற பதிவினைப் பேணி, இலங்கை 2021 யூலையில் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைந்த 10 வருட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வெற்றிகரமாகத் தீர்ப்பனவு செய்தது. அரச பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சிறிதளவான தேறிய உட்பாய்ச்சலைப் பதிவு செய்த வேளையில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இம்மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தது. வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி உடன் செலாவணி வீதம் 2021 யூலையில் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Monday, September 13, 2021