வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 பெப்புருவரி

ஏற்றுமதிகள் உலகளாவிய நோய்தொற்றிற்கு முன்னைய மட்டங்களுக்கு அதிகரித்தமை, தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு, மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஒப்பீட்டு ரீதியில் காணப்பட்ட உறுதியானதன்மை என்பன 2021 பெப்புருவரியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைக்கு ஆதரவளித்தன. 2021 பெப்புருவரியில் வர்த்தகப் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட அதேமட்டத்தில் பெருமளவிற்கு மாற்றமெதுவுமின்றிக் காணப்பட்டது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டிலுமுள்ள வெளிநாட்டு முதலீடுகள் 2021 பெப்புருவரியில் தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தன. 2020 யூலையில் இந்திய றிசேர்வ் வங்கியிலிருந்து பெறப்பட்ட ஐ.அ.டொலர் 400 மில்லியன் கொண்ட சார்க் பினான்ஸ் நிதியின் பரஸ்பர பரிமாற்றல் வசதி முதிர்ச்சியடைந்தமையினைத் தொடர்ந்து 2021 பெப்புருவரியில் மீளச்செலுத்தப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான தேறிய உட்பாய்ச்சல்கள் இம்மாத காலப்பகுதியில் செலாவணி வீதத்தின் மீதான அழுத்தத்தினைத் தளர்த்தியதுடன், ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் மத்திய வங்கி மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கு தேறிய அடிப்படையில் வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்த்துக்கொள்வதனை இயலுமைப்படுத்தின.

முழுவடிவம்

Published Date: 

Friday, April 16, 2021