• Inflation in May 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஏப்பிறலில் 8.4 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பிற்கு மத்தியிலும் தளத்தாக்கமே முக்கிய காரணமாக விளங்கியது. 2017 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.   

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட 6.0 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 6.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

  • Clarification by the Central Bank of Sri Lanka on Gazette Notifications on Issuances of Treasury Bonds

    இலங்கை மத்திய வங்கியானது அரச பிணையங்களின் வழங்கல் தொடர்பில் திருத்தப்பட்ட 1937ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவு தொடர்பில் பின்பற்றப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் பின்வரும் தனது விளக்கத்தினை வழங்க விரும்புகின்றது. 

    1. பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டமானது பதிவு செய்யப்பட்ட பங்குகள், அரச வாக்குறுதிச் சான்றிதழ்கள், கொண்டுவருபவர் முறிகள் மற்றும் திறைசேரி முறிகள் போன்றவற்றினை வழங்கும் நோக்கத்திற்காக இயற்றப்பட்டது. 

  • Workshop on Sustainable Finance

    இலங்கை மத்திய வங்கி, உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினால் முகாமைப்படுத்தப்படும் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் வலையமைப்புடன் கூட்டாக இணைந்து 2017 பெப்புருவரி 28ஆம் நாள் மத்திய வங்கி, கொழும்பின் ஜோன் எக்ஸ்ரர் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி" என்ற தலைப்பில் செயலமர்வொன்றினை நடத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்திருக்கிறது. இச்செயலமர்வில் பிரதம விருந்தினராக மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு பிரதான உரையினை ஆற்றுவார். 

  • Central Bank of Sri Lanka clarifies the position on wilfull mutilation, alteration and defacement of currency notes

    இலங்கை மத்திய வங்கி, அதன் தூய நாணத் தாள் கொள்கையினை நடைமுறைக்கிடுவது தொடர்பில் அதனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றமை பற்றி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. தூயநாணயத் தாள் கொள்கையானது, நாணயத் தாள்களின் தர நியமங்களைப் பேணுவதனையும் அதன் மூலம் உண்மையான தாள்களுக்கும் போலித் தாள்களுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிய உதவுவதனையும் நோக்கமாகக் கொண்டதாகும். இக்கொள்கையினூடாக நாட்டின் நன்மதிப்பினை உயர்த்துவதற்கும் வினைத்திறனை மேம்படுத்தி நாணயத் தாள் செயன்முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்படும் செலவுகளைச் சிக்கனப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • Inflation in January 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 திசெம்பரில் 4.2 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 6.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2017 சனவரியின் ஆண்டிற்கு; ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்துள்ளன.   

    ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின் மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 திசெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

  • Launching of the Data Library of Central Bank of Sri Lanka

    இலங்கை மத்திய வங்கி இன்று, இலங்கை மத்திய வங்கியின் வெளிவாரி வெப்தளத்தினூடாக தரவு நூலகமொன்றினை ஆரம்பித்திருக்கிறது. 

    இலங்கை மத்திய வங்கியின் தரவு நூலகம் அனைத்தையுமுள்ளடக்கியதொரு தரவுத்தளமாக அமைந்திருப்பதுடன் உண்மை, நாணயம், இறை, வெளிநாட்டு மற்றும் நிதியியல் துறைகள் என்பனவற்றைக் கொண்ட பரந்த பல்வேறுபட்ட விடயங்கள் மீதான உரிய நேரத்திலான தரவுகளை உள்ளடக்கியிருக்கிறது. இது சுய தேவைகளுக்கான உருவாக்கம ; அட்டவணைகளைத் தயாரித்தல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மேலும் உசாத்துணைகளுக்காக அவற்றை சேமித்து வைத்தல் போன்றவற்றை இயலுமைப்படுத்துவதன் மூலம் எண்ணிறந்த தரவுத் தேவைப்பாடுகளுக்கு வசதியளிக்கின்றது. 

  • SL Purchasing Managers’ Index Survey - May 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மே மாதத்தில் 57.9 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன், இது 2017 ஏப்பிறல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.1 சுட்டெண் புள்ளிகள் கொண்ட அதிகரிப்பாகும். இது 2017 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் மீட்சியடைந்தமையினை குறித்துக்காட்டுவதுடன் 2017 ஏப்பிறலில் அவதானிக்கப்பட்ட பருவகால சுருக்கத்தினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களின் விரிவாக்கம் பெரிதும் காரணமாக அமைந்தது. மேலும், தொழில்நிலை துணைச்சுட்டெண்ணினை தவிர கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்தன. எவ்வாறாயினும், மாதத்தின் 25ம் நாள் தொடக்கம் உணரப்பட்ட பாதகமான காலநிலை நிலைமைகளால் உருவாகிய  தொழிலாளர் வரவின்மை மற்றும் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தின் அளவு காரணமாக, நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சியினை மெதுவடைய செய்தது.

  • SL Purchasing Managers’ Index Survey - January 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சனவரியில் 56.2 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்ததுடன், இது, 2016 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 2.1 சுட்டெண் புள்ளிகள் குறைவானதாகும். கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சி 2017 சனவரியில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக் காட்டியதுடன் இதற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களில் பிரதிபலிக்கப்பட்டவாறு பருவக்காலத்திற்கு பின்னரான முன்னோக்கிய வியாபாரத்திட்டங்களின் மறு ஒழுங்கமைப்பு மேற்கொள்ளப்பட்டமையே பெருமளவிற்குக் காரணமாக அமைந்தது. கொள்வனவு இருப்புத் துணைச் சுட்டெண் சனவரியில் அதிகரித்து இருப்புக்கள் ஒன்று சேர்ந்தமையை எடுத்துக் காட்டியது. இதற்கு நீண்ட நிரமப்லில் வழங்கல் நேரத்தினை நீடிக்கச்செய்த பொருட்களின் வழங்கலில் காணப்படக்கூடிய சாத்தியமான தாமதங்களை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே முக்கிய காரணமாகும்.

  • Monetary Policy Review: No. 1 – 2017

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்படும் ஆண்டிற்கு ஆண்டு மாற்றஙக்ளினால் அளவிடப்பட்டவாறான, உணவு மற்றும் உணவல்லா பணவீக்கம் இரண்டினாலும் பங்களிக்கப்பட்ட முதன்மைப் பணவீக்கம் 2016 திசெம்பரின் 4.5 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கமும் 2016 திசெம்பரில் 5.8 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 7.0 சதவீதத்திற்கு விரைவடைந்தது. காலம் பிந்திக்கிடைக்கத்தக்கதாக இருக்கும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (2013=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் மையப் பணவீக்கமும் 2016 திசெம்பரில் மேல்நோக்கிய போக்கினைப் பிரதிபலித்து, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முறையே 4.2 சதவீதம் மற்றும் 6.7 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தன.

  • External Sector Performance – October 2016

    சுற்றுலா வருவாய்களில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் வர்தத்கப் பற்றாக்குறையில் காணப்பட்ட மோசமான தன்மையின் காரணமாக 2016 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினையே பதிவுசெய்தது. ஏற்றுமதி வருவாய்களில் சிறிதளவு வளர்ச்சி காணப்பட்டபோதும் உயர்ந்த இறக்குமதிச் செலவினங்களின் விளைவாக ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2016 ஒத்தோபரில் இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு துறைமுகநகர கட்டுமான செயற்றிட்டங்களுக்காக மணல்வாரிக் கப்பலொன்று இறக்குமதி செய்யப்பட்டமையே முக்கிய காரணமாக அமைந்தது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு உயர்வாகக் காணப்பட்ட வேளையில், 2016 ஒத்தோபர் காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்களில் ஆரோக்கியமான வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது.

Pages