தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 மாச்சில் சாதகமான எல்லைக்குத் திரும்பின.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்இ தொடர்ச்சியாக ஒன்பது அளவீட்டு காலங்களின் பின்னர், 2023 மாச்சில் 51.4 சுட்டெண் புள்ளியினைப் பதிவுசெய்து சாதகமாக மாறியது. பிரதானமாக பருவகால கேள்வியின் காரணமாக புதிய கட்டளைகள், உற்பத்தி துணைச் சுட்டெண்களில் அதிகரிப்பினால் மாதத்திற்கு மாத இவ்விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது. எனினும், தொழில்நிலை, கொள்வனவுகளின் இருப்பு மற்றும் நிரம்பலர் விநியோக நேரம் துணைச் சுட்டெண்கள் நடுநிலையான அடிப்படை அளவிற்கு கீழேயே காணப்பட்டன.