• Release of 'Economic and Social Statistics of Sri Lanka - 2017' Publication

    இலங்கை மத்திய வங்கி, ஷஷஇலங்கை பொருளாதார சமூக புள்ளிவிபரங்கள் - 2017 என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

    இவ்வெளியீடானது, தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி, அரச நிதி, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள், பணம் மற்றும் மூலதனச் சந்தைகள், விலைகள் மற்றும் கூலிகள், குடித்தொகை மற்றும் தொழிற்படை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொலைத் தொடர்பூட்டல் பணிகள், காலநிலை ஆகிய துறைகளிலுள்ள இலங்கையின் பொருளாதார, சமூக குறிகாட்டிகளையும் மற்றைய நாடுகளிலுள்ள பொருளாதார, சமூக குறிகாட்டிகள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.

  • External Sector Performance - June 2017

    2017 யூனில் குறிப்பிடத்தக்களவு மேம்பட்ட வர்த்தக மீதி மற்றும் அரச பிணையங்கள் சந்தைக்கான தொடர்ச்சியான உட்பாய்ச்சல் என்பவற்றின் மூலம் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது புத்துயிர் பெற்ற அடையாளத்தினைக் காட்டியது. 2017 யூனில் கைத்தொழில் மற்றும் வேளாண்மை ஏற்றுமதிகளின் கணிசமானதொரு வளர்ச்சி மற்றும் நுகர்வு மற்றும் இடைநிலைப்பொருட்களின் இறக்குமதிகளிலானதொரு வீழ்ச்சி ஆகியன வர்த்தக மீதியில் குறிப்பிடத்தக்களவு மேம்பாட்டினைத் தோற்றுவித்தது. நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களானது அரச பிணையங்கள் சந்தைக்கான உறுதிமிக்க உட்பாய்ச்சல்களாகக் கருதப்பட்ட வேளையில், இம்மாத காலப்பகுதியில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகளும் சாதகமாக மாறாதிருந்தது. தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சியின் மூலம், நடைமுறைக் கணக்கிற்கான ஏனைய முக்கிய பெறுவனவுகள் மாறாது மிதமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களும் மிதமானதொரு வளர்ச்சியை பதிவுசெய்தது.

  • Appointment of a New Deputy Governor

    நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர்     திரு சி ஜே பி சிறிவர்த்தன அவர்களை 2017 ஓகத்து 19ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது. 

    திரு. சி ஜே பி சிறிவர்த்தன

  • Inflation in July 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 யூலையிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.3 சதவீதத்தில் மாறாது விளங்கியது. 2017 யூலையின் ஆண்டுக்கு ஆண்டு  பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனின் 6.1 சதவீதத்திலிருந்து 2017 யூலையின் 6.2 சதவீதத்துக்கு சிறிதளவால் அதிகரித்தது.  

  • SL Purchasing Managers’ Index Survey - July 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூலை மாதத்தில் 54.3 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன், இது பிரதானமாக முன்னைய மாதத்தில் சேர்க்கப்பட்ட மேலதிக இருப்புகளின் பாவனைகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக தொழிலாளர் துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் உந்தப்பட்டது. மாதகாலப்பகுதியில் புதிய கடட் ளைகள் மற்றும் நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்கள் மெதுவடைந்து காணப்பட்ட வேளையில், உற்பத்தி துணைச்சுட்டெண் அதே அளவில் காணப்பட்டது.

  • Views of the Central Bank of Sri Lanka on the National Payment Platform

    'டோடல் பே மற்றும் ஐசிரிஏ" தொடர்பில் சுற்றோட்டத்தில் விடப்பட்ட செய்திக் கடடு;ரைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில், தேசிய கொடுப்பனவுத் தளம் மறுசீரமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகளின் முழுமையான விளக்கத்தினை வழங்கும் நோக்குடன் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையினை வழங்குவதற்கும் பொதுமக்களை தெளிவுபடுத்தவதற்கு இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது.  

  • Regulatory Action on a Primary Dealer - Pan Asia Banking Corporation PLC

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கடட் ளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 ஓகத்து 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2017 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கேப்பிரசேன் பிஎல்சி முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது. 

  • Concessions on Loans Granted to Flood Affected Borrowers

    அண்மைய வெள்ளம், மோசமான வானிலை நிலைமைகள் மற்றும் அதனுடன் இணைந்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்கள் அவர்களின் வியாபாரங்களை மீளத்தொடங்குவதையும் அவர்களின் வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்புவதையும் வசதிப்படுத்தும் நோக்குடன், உரிமம் பெற்ற வங்கிகள் அவற்றின் அத்தகைய பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதித்துள்ளது. 

    இதன்படி, உரிமம் பெற்ற வங்கிகள்;

  • The Financial Intelligence Unit-Sri Lanka enters into Memorandum of Understanding with the Financial Intelligence Unit of the Kingdom of Bhutan and China AML Monitoring and Analysis Centre

    இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கெதிரான புலனாய்வுகளையும் வழங்குகள் தொடர்வதற்கான நடவடிக்கைளையும் வசதிப்படுத்தி நிதியியல் தகவல்களைப் பகிர்நதுகொள்ளும் பொருட்டு 2017 யூலை 17 - 21 காலப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பூட்டான் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் சனீhவின் பணம் தூயதாகக்லைத் தடுப்பதற்கான கணக்hணிப்பு மற்றும் பகுப்பாய்வு நிலையம் போன்றவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது.  

  • Monetary Policy Review - No. 5 of 2017

    The Monetary Board, at its meeting held on 02 August 2017, was of the view that the current monetary policy stance is appropriate and decided to maintain the policy interest rates of the Central Bank of Sri Lanka at their present levels.

    In arriving at the above decision, the Monetary Board took into consideration current and expected developments in the domestic and international macroeconomic environment and the need to maintain inflation at mid-single digit levels over the medium term.

Pages