• Central Bank continues regulatory actions against errant Money Changers

    அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களின் அமைவிடங்களில் மத்திய வங்கி தொடர்ந்த தலத்திலான பரீட்சிப்புக்கள், பின்வரும் நாணய மாற்றுநர்கள் உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீதங்களுக்கு அப்பாலான வீதங்களில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டிருப்பதனையும் அதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகின்றன. 

    i. சுவிஸ் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 01 (தலைமை அலுவலகம்) மற்றும் கொழும்பு 06 (கிளை)

    ii. வெஸ்ரேன் மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், கொழும்பு 06 

  • External Sector Performance - January 2022

    ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்கள் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதிலும், இறக்குமதி செலவினம் விரிவடைந்தமையின் மூலம் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2021 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2022 சனவரியில் விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியிலும் பார்க்க 2022 சனவரியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்த வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான தன்மையொன்று 2022 சனவரியில் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியினை 2022 சனவரியில் இலங்கை வெற்றிகரமாகத் தீர்த்திருந்தது. சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்தான சார்க் நிதிய பரஸ்பர பரிமாற்றல் வசதியினது பெறுகையுடன் இம்மாத காலப்பகுதியில் வலுவடைந்து காணப்பட்டது. சனவரியில் ரூ.

  • Central Bank suspends Money Changing permit issued to Prasanna Money Exchange (Pvt) Ltd

    பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர்ந்த செலாவணி வீதங்களை வழங்குகின்றது என்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2022.03.30 அன்று பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டில் தலத்திலான விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணைகளில் பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர் செலாவணி வீதங்களை வழங்கியுள்ளமை பற்றியும் அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செலாவணி வீதத்திலும் பார்க்க உயர்ந்த வீதங்களில் வெளிநாட்டுச் செலாவணியினைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்பது பற்றியும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டுள்ளமை பற்றியும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. 

  • NOTICE TO THE PUBLIC – MONEY CHANGERS

    உரிமம்பெற்ற வங்கிகளினால் நாணய மாற்றுநர்களுக்கு வழங்கப்படும் செலாவணி வீதங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு உயர்வான செலாவணி வீதங்களை வழங்குவதிலிருந்து அத்தகைய நாணய மாற்றுநர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

    உரிமம்பெற்ற வங்கிகளினால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களைத் தாண்டிய வீதங்களில் ஏதேனும் வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை அவர்கள் மேற்கொள்வார்களாயின் அவர்களது உரிமங்கள் இடைநிறுத்தப்படலாம்/ இரத்துச்செய்யப்படலாம் என நாணய மாற்றுநர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

  • The CBSL’s Comments on the IMF Article IV Report

    பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது;

  • Clarification Regarding the Forex Sales by Banks to the Central Bank of Sri Lanka
    2022.03.21 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு வங்கிகள் விற்பனை செய்யும் வெளிநாட்டுச் செலாவணியின் சதவீதம், 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் அதிகரிக்கப்பட்டமை வங்கிகளுக்கே பிரத்தியேகமாக ஏற்புடைத்தானதெனவும் அது வெளிநாட்டில் பணிபுரிவோர்களினது வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதிப் பெறுகைகள் மீதான தற்போதைய தேவைப்பாடுகளின் மீது எந்தவொரு தாக்கத்தினையும் கொண்டிருக்காது என்பதனையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.
     
  • Statement from the Central Bank of Sri Lanka

    முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது.

  • The Central Bank of Sri Lanka issues a Circulation Standard Commemorative coin to mark 150th Anniversary of Faculty of Medicine, University of Colombo

    நாட்டின் முதலாவது மருத்துவபீடம் என்ற ரீதியில் நாட்டிற்கு அது வழங்கிய பங்களிப்பினை அங்கீகரிக்கின்ற விதத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்நாணயக்குற்றியானது கொழும்பு பல்கலைக்கழக்கத்தின் மருத்துவபீடத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்பட்டது.

  • The Central Bank of Sri Lanka issues a Circulation Standard Commemorative Coin to mark 150th Anniversary of Census of Population and Housing in Sri Lanka

    இலங்கையில் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்த நிகழ்வினை அங்கீகரிக்கின்ற விதத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிடுகிறது. இந்நாணயக்குற்றியானது இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்படுகிறது. 

    இலங்கையில் முதலாவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 1871இல் நடத்தப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு 150ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது. 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டினை 2021இல் அதன் ஆண்டு நிறைவுடன் சேர்த்து நடத்துவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீடு 2022 - 2023 வரை பிற்போடப்பட்டிருக்கிறது.

  • Proposed additional incentive scheme for expatriate workers’ remittances and exporters to be rescinded

    செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின் விளைவாக, செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விஞ்சுகின்றதொரு மட்டத்தினை தற்போது அடைந்துள்ளமையினைக் காணமுடிகிறது.

Pages