இலங்கை சுபீட்சச் சுட்டெண் (SLPI) 2021இல் 0.796 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்ததுடன், இது, கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 0.764 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவு அதிகரிப்பினைக் காட்டியது. ‘பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்’, ‘மக்கள் நலனோம்புகை’ மற்றும் ‘சமூக பொருளாதார உட்கட்டமைப்பு’ ஆகிய துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்புக்கள் இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பிற்குப் பங்களித்தன.