கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், 57.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 பெப்புருவரியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. தற்போதைய ஆக்கபூர்வமான சூழலும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல கருத்திட்டங்கள் மீளத்தொடங்கியமையும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் வளர்ச்சிக்கு காரணமாகவிருந்தன என பல நிறுவனங்கள் குறிப்பிட்டன.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – February 2024
-
External Sector Performance - February 2024
இறக்குமதிச் செலவினம் மற்றும் ஏற்றுமதி வருவாய்கள் ஆகிய இரண்டும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2024 பெப்புருவரியில் அதிகரித்தன. இருப்பினும், இறக்குமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையினால் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. மேலும், இறக்குமதிச் செலவினமானது தாழ்ந்தளவிலான எரிபொருள் இறக்குமதி காரணமாக முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்புருவரியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
சுற்றுலாத்துறை, கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, மற்றும் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம்ஃவெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளலுடன் தொடர்புடைய பணிகள் என்பவற்றிலிருந்தான வருவாய்களின் நியதிகளில் பணிகள் துறை குறிப்பிடத்தக்களவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது.
தொழிலாளர் பணவனுப்பல்கள்; ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2024 பெப்புருவரி மாதத்திலும் மேம்பாடுகளைத் தொடர்ந்தும் பதிவுசெய்தன.
-
The Central Bank of Sri Lanka Further Reduces Policy Interest Rates
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2024 மாச்சு 25ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதத்திற்கும் 9.50 சதவீதத்திற்கும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்குத் தீhமானித்தது. நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்டமட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதை இயலச்செய்வதற்கு தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார அபிவிருத்திகள் பற்றிய விரிவான மதிப்பீடொன்றினைத் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில் சபையானது ஏனையவற்றிற்கு மத்தியில், குறைவடைந்த கூட்டுக் கேள்வி நிலைமைகள், வரிக்கட்டமைப்பிற்கான அண்மைய மாற்றங்களின் பணவீக்கம் மீதான எதிர்பார்க்கப்பட்டதைக்காட்டிலும் குறைவான தாக்கம், மின்சாரக் கட்டணங்களுக்கான அண்மைய சரிப்படுத்தல் காரணமாக சாதகமான அண்மைக்கால பணவீக்க இயக்கவாற்றல்கள், மிகவும் நிலைநிறுத்தப்பட்ட எதிர்பார்க்கைகள், மிதமிஞ்சிய வெளிநாட்டுத் துறை அழுத்தங்கள் இல்லாமை, சந்தை வட்டி வீதங்களில் கீழ்நோக்கிய போக்கினைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தேவை என்பன பற்றி சபை கருத்திற்கொண்டது. பொருளாதார நடவடிக்கையானது நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்கு சாரசரிக்கு கீழ் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமையினால், அண்மைய காலத்தில் பணவீக்கத்திற்கான சாத்தியமான இடர்நேர்வுகள் நடுத்தரகால பணவீக்கத் தோற்றப்பாட்டில் முக்கிய மாற்றத்தினைக் கொண்டிருக்காது என சபை அவதானத்தில் கொண்டது. நாணயச் சபையானது நாணயத் தளர்த்தல் வழிமுறைகளின் விரிவான மற்றும் முழுமையான ஊடுகடத்தலுக்கான, குறிப்பாக நிதியியல் நிறுவனங்கள் மூலமான கடன்வழங்கல் வீதங்களுக்கும் இதனூடாக வரவிருக்கும் காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்கள் இயல்புநிலைக்குத் திரும்புவதைத் துரிதப்படுத்துவதற்குமான தேவையினை வலியுறுத்தியது.
-
CBSL senior management to revisit recent salary revision
ஆளும் சபைக்கும் ஊழியர் பிரதிநிதிகளுக்குமிடையிலான கூட்டு உடன்படிக்கைக்குப் பின்னர் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட 2024-2026 காலப்பகுதிக்கான அண்மைய சம்பளத் திருத்தமானது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில், தமது சம்பளங்களுக்கான திருத்தமொன்றினை பரிசீலனையில் கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் மூத்த முகாமைத்துவத்தினதும் தொழில்சார் நிபுணர்களினதும் பெரும்பாலானோர் கூட்டான தீர்மானமொன்றினை மேற்கொண்டனர். இத்தீர்மானம் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் ஆக்கப்பட்ட சுயாதீன பரிந்துரைக்கு முன்னர், 2024 மாச்சு 16 அன்று அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
-
IMF Reaches Staff-Level Agreement on the Second Review of Sri Lanka’s Extended Fund Facility and Concludes the 2024 Article IV Consultation
பன்னாட்டு நாணய நிதிய பணிக்குழுவொன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நான்கு ஆண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின்; இரண்டாம் மீளாய்வினையும் 2024 உறுப்புரை IV ஆலோசனையையும் நிறைவுசெய்வதற்காக 2024 மார்ச் 07-21 காலப்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. பணிக்குழுவின் பின்னர் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும்; விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாம் மீளாய்வினை நிறைவுசெய்வதற்கு பொருளாதாரக் கொள்கைகள் மீதான அலுவலர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டியுள்ளனர். பணிக்குழுவானது பின்வரும் அறிக்கையினை வெளியிட்டதுடன் அதனைக் கீழுள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
-
Purchasing Managers’ Indices indicate improvements in Manufacturing and Services activities in February 2024
தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாாிப்பு), 2024 பெப்புருவரியில் 56.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. இம்மேம்படுதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.
தொழில் நடவடிக்கைகளின் தொடர்ச்சியான விரிவடைதலானது ஏனைய பல துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, நிலவுகின்ற குறைவான சந்தை வட்டி வீதங்களுக்கிசைவாக நிதியியல் பணிகளின் தொழில் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்தன. மேலும், மாதகாலப்பகுதியில், போக்குவரத்து மற்றும் கல்வி துணைத் துறைகளில் சாதகமான அபிவிருத்திகளும் பதிவுசெய்யப்பட்டன. அதேவேளை, சுற்றுலாப்பயணி வருகைகள் 2020 சனவரியிலிருந்து அதிகூடிய மட்டத்தைப் பதிவுசெய்தமைக்கு மத்தியில்; தங்குமிடம், உணவு மற்றும் குடிபானங்கள் துணைத் துறை தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தது.
-
Publication of the Macroprudential Policy Framework
இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 63(2)ஆம் பிரிவின் பிரகாரம் பேரண்டமுன்மதியுடைய கொள்கைக் கட்டமைப்பினை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. பேரண்டமுன்மதியுடைய கொள்கை வகுத்தல் செயன்முறை அதேபோன்று நிதியியல் முறைமையில் பேரண்டமுன்மதியுடைய கொள்கையின் வகிபாகம் என்பன பற்றி தொடர்புடைய ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இவ்வெளியீடு நோக்காகக் கொண்டுள்ளது.
-
External Sector Performance - January 2024
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினத்தின் முக்கிய காரணமாக 2024 சனவரியில் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது.
பணிகள் வர்த்தகத்தினைப் பொறுத்தவரையில், கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம்/ வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளலுடன் தொடர்புடைய பணிகள் என்பன 2023 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2024 சனவரியில் குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, விமானப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து, முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை வழங்குகின்ற பணிகள் என்பவற்றில் வெளிப்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டன.
தொழிலாளர் பணவனுப்பல்கள் முன்னைய ஆண்டின் சனவரி மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024இன் தொடர்புடைய காலப்பகுதியில் மேம்பாடொன்றினைப் பதிவுசெய்தன.
-
CCPI based headline inflation decelerated in February 2024
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 சனவரியின் 6.4 சதவீதத்திலிருந்து 2024 பெப்புருவரியில் 5.9 சதவீதத்திற்கு சரிவடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இச்சரிவானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – January 2024
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், 52.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. 2022 சனவரி தொடக்கம் முதற்தடவையாக நடுநிலையான அடிப்படை அளவினை இச்சுட்டெண் விஞ்சிச்சென்றமையை இது அடையாளப்படுத்துகின்றது. மாதகாலப்பகுதியில் புதிய கட்டடவாக்கப் பணி படிப்படியாகக் கிடைக்கப்பெறுகின்றமையாக இருக்கின்ற அதேவேளை, இடைநிறுத்தப்பட்ட சில கருத்திட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டளவில் மீளத்தொடங்கப்பட்டன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.