• Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - May 2024

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகின்றன.

    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 மேயில் 58.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றைப் எடுத்துக்காட்டியது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் மாத காலப்பகுதியில், நடுநிலையான எல்லைக்கு மேலே உயர்வடைந்து, சுட்டெண் பெறுமதியில் ஒட்டுமொத்த அதிகரிப்பொன்றை விளைவித்தன. 

    பணிகளுக்கான இலங்கைக் கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 55.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 மேயில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

  • Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the Commission to Investigate Allegations of Bribery or Corruption

    இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் பணம் தூயதாக்குதல், இலஞ்சம் அல்லது ஊழல் மற்றும் ஏனைய தொடர்பான குற்றங்கள் பற்றிய புலனாய்வுகள் மற்றும் வழக்குத் தொடுப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாற்றிக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது.

  • 45th SAARCFINANCE Governors’ Meeting and Symposium

    இலங்கை மத்திய வங்கி 2024 யூன் 13-14ஆம் திகதிகளில் 45ஆவது சார்க்பினான்ஸ்; ஆளுநர்களின் கூட்டம் மற்றும் கருத்தரங்கை நடாத்தியிருந்தது. இந் நிகழ்ச்சியில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள், சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சார்க் பிராந்தியத்தில் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்களின் ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    முதல் நாளில், “பன்முக - உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கியியல்” என்ற கருப்பொருளில் சார்க்பினான்ஸ்;; ஆளுநர்களின் கருத்தரங்கு கொழும்பில் உள்ள ஹில்டன் கொழும்பு விடுதியில் நடைபெற்றது. இலங்கையின் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சருமான மேன்மைமிகு ரணில் விக்கிரமசிங்கே தொடக்க விழாவில் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சமகால பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார். நாணய மற்றும் இறை உறுதிப்பாட்டின் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன் நாட்டில் நீடித்திருக்கும் உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கு சட்டக்கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்காக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் கோடிட்டுக்காட்டினார். சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், தூதர் முகமது கேலாம் சர்வரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

  • IMF Executive Board Concludes 2024 Article IV Consultation with Sri Lanka and Completes the Second Review Under the Extended Fund Facility

    பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது 2024 உறுப்புரை IV ஆலோசனையினையும் இலங்கையுடனான 48 மாத காலம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான இரண்டாவது மீளாய்வினையும் நிறைவுசெய்து, அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 336 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது.

  • Central Bank of Sri Lanka to Function as the Regulatory and Supervisory Authority of Money or Value Transfer Service Providers

    இலங்கையில் பணம் மாற்றல் சேவைகளை வழங்குகின்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அல்லது வேறு தொடர்புடைய அதிகாரிகளினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், முறைசார்;ந்த முறைமைக்கு வெளியில் தொழிற்படுகின்ற ஒரேமாதிரியான சேவைகளை வழங்குகின்ற சில நிறுவனங்கள் பணம் மாற்றல் முறைமைக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் தொடர்பான நிதியிடல் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படாது தொழிற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

  • CCPI based headline inflation decelerated in May 2024

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 ஏப்பிறலின் 1.5 சதவீதத்திலிருந்து 2024 மேயில் 0.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.

  • Sri Lanka Purchasing Managers’ Index (Construction) - April 2024

    பாரம்பரிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பல துறைகள் முழுவதும் நடவடிக்கைகள் மெதுவடைந்த பருவகால விதத்தின் பின்னர், கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 ஏப்பிறலில் 31.9 சுட்டெண் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்தது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் சுருக்கத்தினை இது எடுத்துக்காட்டுகின்றது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கிணங்க, நீடித்த புத்தாண்டு விடுமுறை காரணமாக மாதகாலப்பகுதியில் அநேகமான கட்டடவாக்க இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து, மாதத்திற்குமாத இவ்வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

  • External Sector Performance - April 2024

    2024 ஏப்பிறலில் ஏற்றுமதிகள் இறக்குமதிகளிலும் பார்க்க அதிகரித்து (ஆண்டிற்காண்டு) வர்த்தகப் பற்றாக்குறையினைக் குறைவடையச் செய்தன. இருப்பினும், 2024 சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதிக்கான ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது விரிவடைந்து காணப்பட்டது.

    பருவகாலப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் 2024 ஏப்பிறலில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மெதுவடைந்து காணப்பட்டபோதிலும் சுற்றுலாத் துறையின் உத்வேகம் தொடர்ந்து காணப்படுகின்றது.

    ஏனைய பணிகள் துறைகளிற்கான உட்பாய்ச்சல்களும் 2024இன் முதல் நான்கு மாதங்களில் தொடர்ந்தும் வலுவடைந்து காணப்பட்டன.

  • The Central Bank of Sri Lanka Maintains Policy Interest Rates at their Current Levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2024 மே 27ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சாத்தியமான இடர்நேர்வுகள் என்பவற்றினைக் கவனமாக மதிப்பீடு செய்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாடானது தற்போதைய கொள்கை வட்டி வீத மட்டத்துடன் தொடர்ந்தும் ஒத்திசைந்து செல்வதுடன் பணவீக்க எதிர்பார்க்கைகள் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு நாணய நிலைமைகளின் தளர்வு மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மீட்சி என்பவற்றிற்கு இன்றியமையாததாக விளங்குகின்ற கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் ஏனைய அடிப்படை வட்டி வீதங்கள் என்பவற்றுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களில் மேலுமொரு குறைப்பிற்கான தேவையை சபை அவதானத்திலெடுத்தது.

  • Central Bank Launches Financial Literacy Roadmap of Sri Lanka 2024-2028

    இன்று அதாவது, 2024 மே 21 அன்று இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் நிதியியல் அறிவு வழிகாட்டலை அங்குரார்ப்பணம்செய்து, இலங்கையின் நிதியியல் இயலளவுகளை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய படிமுறையினை அடையாளப்படுத்தியது. இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் அத்திவாரமான இவ்வழிகாட்டலானது இலங்கையர்களின் நிதியியல் நடத்தையினை மேம்படுத்தி, அவர்களின் நிதிசார் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலிமைப்படுத்தும் பொதுவானதோர் குறிக்கோளை நோக்கி நிதியியல் அறிவு முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் அணிசேர்த்து அவர்களுக்குச் சான்று அடிப்படையிலான வழிகாட்டலை வழங்குகின்றது.

Pages