தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் பெப்புருவரியில் விரிவடைந்தன.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் விரிவடைதல் காரணமாக 2021 பெப்புருவரியில் 59.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து அதன் விரிவடைதலில் நிலைத்திருந்தது. மேலும், ஒட்டுமொத்த தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணையும் உயர்வான மட்டமொன்றில் நிலைத்திருப்பதற்குத் துணையளித்து கொள்வனவுகளின் இருப்பு அத்துடன் தொழில்நிலை அதேபோன்று நிரம்பலர் விநியோக நேரம் என்பன விரிவடைந்து காணப்பட்டன.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண் 2021 பெப்புருவரியில் 56.5 இற்கு அதிகரித்து பணிகள் துறை மேலும் மேம்படுவதனை எடுத்துக்காட்டியது. இவ்வதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகளில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் துணையளித்திருந்தன.








