• Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the National Center for Financial Information in the Sultanate of Oman

    இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, லக்~ம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற எக்மன்ட் குழுமத்தின் 31ஆவது முழுநிறைவுக் கூட்டத்தின் போது, 2025 யூலை 09ஆம் திகதியன்று ஓமான் சுல்தானாவின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூயதாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதி நிதியிடல் என்பவற்றுடன் தொடர்புடைய  நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கின்றது.

  • SL Purchasing Managers’ Index (PMI) – June 2025

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் ஆகிய இரண்டு நடவடிக்கைகளிலும் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.

  • Anti-Pyramid National Awareness Week - 14th to 18th July 2025

    “பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் 2025 யூலை 14 தொடக்கம் 18 வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரத்தினை தொடங்கவுள்ளது.

  • Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited

    இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2025 யூலை 05ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

  • Execution of Resolution Action on Nation Lanka Finance PLC [NLFP] under the Banking (Special Provisions) Act, No. 17 of 2023

    2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறி மறுத்து வந்திருக்கின்றது. மேலும், நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.

  • Central Bank Launches Transformative Financial Literacy Initiatives Towards Building a Financially Literate Sri Lanka

    நிதியியல் அறிவினைக் கொண்ட இலங்கை” என்ற பரந்தளவிலான தொலைநோக்கை கட்டியெழுப்புவதுடன் அணிசேர்ந்து, நிதியியல் அறிவு பற்றிய வழிகாட்டலின் கீழ் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளை அங்குரார்ப்பணம் செய்வதன் மூலம், மத்திய வங்கி 2025 யூலை 3 அன்று அதன் நிதியியல் வசதிக்குட்படுத்தல் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைற்கல்லை அடைந்துள்ளது. ஆற்றல்வாய்ந்த நிதியியல் தீர்மானத்தை மேற்கொள்ளுதல் மற்றும் நிலைபெறத்தக்க பொருளாதார நலனோன்புகை போன்றவற்றுக்காக பொதுமக்களின் நிதியியல் நடத்தையை மாற்றும் வகையில் அறிவு, திறன்கள், மற்றும் எண்ணப்பாங்குடன் அவர்களை வலுவூட்டுவதற்கான மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினை இம்முன்னெடுப்புக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

  • IMF Executive Board Completes the Fourth Review Under the Extended Fund Facility with Sri Lanka

    பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கையுடனான 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 350 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கை பெற்றுக்கொள்கின்ற ஐந்தாவது தொகுதியாக காணப்படுவதுடன், இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய நிதியியல் ஆதரவினை சிஎஉ 1.27 பில்லியனிற்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.74 பில்லியன்) அதிகரிக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 யூலை 03 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

  • External Sector Performance - May 2025

    நடைமுறைக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த மிகையொன்றுடன் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 மேயில் மேலும் வலுவடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்களின் ஆரோக்கியமான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டு, விரிவடைந்து செல்கின்ற வர்த்தகப் பற்றாக்குறையொன்றினை எதிரீடு செய்தன.

  • CCPI based deflation eases further in June 2025

    2025 யூனில் பணச்சுருக்கம் தொடர்ந்தும் தளர்வடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணச்சுருக்கமானது மேயின் 0.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 யூனில் 0.6 சதவீததத்தைப் பதிவுசெய்து, சிறிதளவு குறைவான வீதத்தை எடுத்துக்காட்டியது. 

  • Sri Lanka PMI - Construction rebounded in May 2025

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 மேயில் 59.7 சதவீதமாக மீளெழுச்சியடைந்தது. ஏப்பிறலின் பண்டிகை பருவ கால மந்தநிலையிலிருந்து மீண்டு கட்டடவாக்க நடவடிக்கைகள் மேயில் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளன என அநேகமான பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

Pages