தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 மாச்சின் 5.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2020 ஏப்பிறலில் நிலவிய குறைவான தளப் புள்ளிவிபரத் தாக்கம் முக்கிய காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 8.8 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலில் 5.3 சதவீதத்தில் மாற்றமின்றி காணப்பட்டது.