இலங்கை அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதி 2021 மீது வெளியிடப்பட்ட முன்மொழிவுக்கான கோரிக்கையுடன் தொடர்புடைய இணையத் தொடர்புகள் பின்வருமாறு நிதி அமைச்சின் இணையத்தளத்திலும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் காணப்படுகின்றன:
-
Government of Sri Lanka calls for Request for Proposals for the Foreign Currency Term Financing Facility
-
CCPI based Inflation increased to 6.0 per cent in August 2021
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூலையில் 5.7 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 11.0 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 11.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 3.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 4.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.
-
Sri Lanka receives Special Drawing Rights (SDR) Allocation of International Monetary Fund (IMF) and the Initial Disbursements under the Currency Swap Arrangement with the Bangladesh Bank
2021 ஓகத்து மாத காலப்பகுதியில் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டின் அதன் பகுதியினையும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்காளதேச வங்கிகளுக்கிடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாட்டின் கீழ் ஆரம்ப பகிர்ந்தளிப்புக்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையினால் பெறப்பட்ட சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டானது ஐ.அ.டொலர் 787 மில்லியனிற்கு சமனாக இருந்த அதேவேளை, வங்காளதேச வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் கீழ் ஐ.அ.டொலர் 150 மில்லியன் பெற்றுக்கொள்ளப்பட்டது. -
NCPI based Inflation increased in July 2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 யூனின் 9.8 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 11.0 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 யூனின் 2.9 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூலையில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
-
Use of Electronic Fund Transfer Cards (EFTCs) for Payments in Foreign Exchange
கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு வெளிநாட்டுச் செலாவணியில் சில கொடுப்பனவுகளை மேற்கொள்வதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள்/ தடுக்கப்பட்டுள்ளார்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது என மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
-
The Central Bank of Sri Lanka tightens its Monetary Policy Stance
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஓகத்து 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும், ஒவ்வொன்றையும் 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 5.00 சதவீதத்திற்கு 6.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, 2021 செத்தெம்பர் 01ஆம் திகதியன்று தொடங்குகின்ற ஒதுக்குப் பேணுதல் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2.0 சதவீதப் புள்ளிகளால் 4.00 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கும் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. மேம்பட்ட வளர்ச்சி எதிர்பார்க்கைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறை மீதான சமமின்மையினை கையாளுவதற்கும் நடுத்தர காலத்தில் எவையேனும் மிதமிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள் தோற்றுவிக்கப்படுவது தொடர்பிலான முன்னெச்சரிக்கை வழிமுறை நோக்கிலும் இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
-
Licensed Banks have not been asked to “Devalue” the Sri Lanka Rupee
உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளன என்ற செய்திகள் பரப்பப்பட்டுவருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.
அத்தகைய செய்திகள் எவ்விதத்திலேனும் அடிப்படையற்றவை என பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுவதுடன் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டுரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.
-
Sri Lanka Purchasing Managers’ Index - July 2021
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 யூலையில் விரிவடைந்தன.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2021 யூனுடன் ஒப்பிடுகையில் 7.4 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 57.8 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்து 2021 யூலையில் மேலும் அதிகரித்தது. இதற்கு, புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளில் இருப்பு துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் பிரதான காரணமாக அமைந்தது.
பணி நடவடிக்கைகளின் மேலும் விரிவாக்கத்தினை சமிக்ஞைப்படுத்தி, பணிகள் கொ.மு.சுட்டெண் 2021 யூலையில் 55.7 இனைக் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு மேலும் அதிகரித்தது. இவ்வதிகரிப்பானது புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கை, நிலுவையிலுள்ள பணி அத்துடன் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பனவற்றில் காணப்பட்ட அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.
-
External Sector Performance - June 2021
2021 யூனில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ந்து நான்காவது மாதமாக விரிவடைந்து காணப்படுகிறது. 2021 யூனில் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இரண்டும் 2020 யூனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவிற்கு உயர்வாகக் காணப்பட்டன. ஆண்டின் முதலரைப்பகுதியைப் பரிசீலனையில் கொள்கையில் ஏற்றுமதிகள் ஆரோக்கியமான வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்த போதும் இறக்குமதிச் செலவினம் உயர்ந்த வேகத்தில் அதிகரித்தது. 2021 யூனில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் குறைந்தளவு மட்டத்தில் காணப்பட்டன. நிதியியல் கணக்கில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலும் வெளிநாட்டு முதலீடு இம்மாத காலப்பகுதியில் சிறிதளவு தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்தது. இலங்கை ரூபா 2021 யூனில் பெருமளவிற்கு உறுதியாகக் காணப்பட்டது.
-
Closure of Public Relations Counters of Employees’ Provident Fund (EPF) Department of the Central Bank of Sri Lanka
லொயிட்ஸ் கட்டடம், சேர் பாரன் ஜெயதிலக மாவத்தை, கொழும்பு – 01 இல் அமைந்துள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் விசாரணைகள் கருமபீடங்கள் பிரிவில் பல ஊழியர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதனால் இப்பிரிவு 2021.08.20 வரை மூடப்படுமென ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.
ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் ஏனைய அனைத்து பணிகளும் தடையின்றி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். மேலதிக தகவல்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களைப் பார்க்கவும் அல்லது www.epf.lk என்ற எமது இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.