வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது.
அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு 03ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், 2022 சனவரியில் பின்பற்றப்பட்ட அதன் நிலைப்பாட்டை மீளவும் வலுப்படுத்துவதற்கு தீர்மானித்ததுடன், பின்வரும் தீர்மானங்களையும் மேற்கொண்டிருந்தது:









இலங்கைக்கு வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு பணம் அனுப்புகின்ற போது முறைசார்ந்த பணம் அனுப்பும் வழிகளை உபயோகிப்பதனை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதற்கமைய, "Lanka Remit" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இச்செயலி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.