![]()
‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
![]()
‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 15.2 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் 215.3 ஆகப் பதிவாகியது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் முறையே 17.2 சதவீதம், 15.1 சதவீதம் மற்றும் 13.5 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்புகளுடன் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் 4.9 சதவீதத்தினால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கான அதிகூடிய பங்களிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலிருந்து இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகள் காணப்பட்டன. எனினும், 2023இன் முதலரை காலப்பகுதியில் காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அரையாண்டு வளர்ச்சியில் வேகத்தளர்ச்சி அவதானிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 10(இ) பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2023ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை வழங்கி, அதனை 2023.08.09 அன்று 2344/17ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் பணி வழங்குநர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஒரேசீர்மையான அடிப்படையில் ஏற்புடையதாவிருக்கும் என்பதுடன் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பாக, வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்குவிடுதல் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு பணிப்புரைகளின் தற்போதைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023 யூலை 04ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் பரிமாற்று விஞ்ஞாபனத்திற்கும் (“பரிமாற்று விஞ்ஞாபனம்") அதனைத்தொடர்ந்து இலங்கை அபிவிருத்தி முறி பரிமாற்றத்திற்கான அழைப்பிதழுக்கான (பரிமாற்று விஞ்ஞாபனத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு) பெறுபேறுகளின் அறிவித்தலுக்கும் மேலதிகமாக, செலுத்தவேண்டிய தகைமையுடைய இலங்கை அபிவிருத்தி முறிகள் (தகைமையுடைய முறிகள்) ஐந்து (5) புதிய மாறிலி கூப்பன் (துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்* +1.00%) இலங்கை ரூபாவில் பெயர்குறிக்கப்பட்ட புதிய திறைசேரி முறிகளுக்கு மாற்றப்பட்டு 2023.08.15 அன்று பின்வருமாறு தீர்ப்பனவுசெய்யப்பட்டன:
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 யூலையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினையும் எடுத்துக்காட்டின.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 யூலையில் 44.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தொடர்ந்து வீழ்ச்சியடைந்து தயாரித்தல் நடவடிக்கைகள் மீட்சியடைவதில் தாமதத்தை எடுத்துக்காட்டியது. அனைத்துத் துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் இப்பின்னடைவிற்கு பங்களித்தது.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 யூலையில் 59.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து மேலும் அதிகரித்து, பணிகள் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்து காணப்பட்டன.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2023 ஓகத்து 08 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2023 ஓகத்து 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4.00 சதவீதத்திலிருந்து 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கும் வகையில், வங்கித்தொழில் முறைமைக்குள் திரவத்தன்மையை உட்செலுத்தி, சந்தை திரவத்தன்மை பற்றாக்குறையை நிரந்தர அடிப்படையொன்றில் மேலும் குறைக்கும் நோக்குடன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிதியியல் வசதிக்குட்படுத்தல் முயற்சிகளை நோக்கிய அதன் உபாய நோக்கிற்கு முக்கியத்துவமளித்து பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரத்தியேகமான வெப்தளப் பக்கத்தை இலங்கை மத்திய வங்கி 2023.08.04 அன்று தொடங்கிவைத்தது.
2018ஆம் ஆண்டு தொடக்கம் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பதில் இலங்கை மத்திய வங்கியுடன் நீண்டகாலம் நிலைத்திருக்கின்ற பங்குடமையாளரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் உதவியுடன் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் வெப்தளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிந்திய இம்முன்முயற்சியானது இலங்கைக்கான ஒட்டுமொத்த தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் ஒரு பாகமாக விளங்குகின்றது - நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் தொழில்களுக்கும் அதிகம் கிடைக்கத்தக்க, வினைத்திறன்மிக்க மற்றும் வசதியான நிதியியல் பணிகளை கிடைக்கச்செய்யும் முயற்சியில் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் முக்கிய பங்காற்றியுள்ளது.
இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவதை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.
பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லைகடந்த வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றை வசதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி காலத்திற்குக் காலம் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிகாரமளிக்கின்றது. 1979 மே தொடக்கம் இலங்கை மத்திய வங்கி அவ்வப்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை அங்கீகரித்துள்ளது. தற்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக வங்கித்தொழில் சட்டம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2022 ஓகத்தில் பிந்தியதாக உட்சேர்க்கப்பட்ட இந்திய ரூபாயுடன் பின்வரும் 16 நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 யூனின் 12.0 சதவீதத்திலிருந்து 2023 யூலையில் 6.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூனில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.
நாணயக்கொள்கை அறிக்கையின் வெளியீடானது நாணயக்கொள்கையின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்துவதற்கான முக்கியமானதொரு படிமுறையினைக் குறிப்பதுடன் நாணயக்கொள்கைத் தீர்மானங்களை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதனூடாக அனைத்து ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.