தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறு முதன்மைப் பணவீக்கம் 2016 சனவரி முதல் ஆகக் குறைவாக 2018 ஒத்தோபரில் 0.1 சதவீதத்தினைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. 2018 ஒத்தோபரில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலானது பிரதானமாக உயர்வான உணவு விலைகளின் காரணமாக முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் நிலவிய உயர்வான தளத்தினால் தூண்டப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கமானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் வீழ்ச்சியடைந்து 2018 ஒத்தோபரில் -6.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. எவ்வாறாயினும், ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது மாதத்தின் போது தொடர்ந்து அதிகரித்து 5.8 சதவீதத்தினை அடைந்தது.
-
Inflation in October 2018
-
Moody’s Latest Rating Decision is Unfounded
இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய வழங்குநர் மற்றும் முன்னுரிமை பிணையளிக்கப்படாத தரப்படுத்தல்களை B1 (எதிர்மறை) இலிருந்து B2 (நிலையானது) இற்கு தரம் குறைப்பதற்காக 2018 நவெம்பர் 20 அன்று மூடிஸ் முதலீட்டாளர் சேவையினால் (மூடிஸ்); எடுக்கப்பட்ட தீர்மானமானது நாட்டின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளை முறையாகப் பிரதிபலிக்கவில்லை எனவும் இது அடிப்படையற்றது எனவும் இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.
-
Sri Lanka Prosperity Index - 2017
2017இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் 2016இல் பதிவுசெய்யப்பட்ட 0.661 இலிருந்து 0.771 இற்கு அதிகரித்தமைக்கு “பொருளாதாரம் மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும். பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் மேம்பட்டமைக்கு தலைக்குரிய மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பும் தொழில் வாய்ப்புடன் இணைந்து காணப்பட்ட அம்சங்களில் ஏற்பட்ட அதிகரிப்புக்களும் காரணங்களாக அமைந்தன. சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணினைப் பொறுத்தவரையில் விரைவுப் பாதையின் விரிவாக்கத்தின் காரணமாக வீதிவலையமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பாலங்கள் மற்றும் மேம்பாலச் செயற்றிட்டங்களின் கட்டுமானம், மின்னூட்டல் வசதிகளின் கிடைப்பனவு மற்றும் குழாய்வழி நீரின் தரத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் என்பன முக்கிய தூண்டுதல்களாக அமைந்தன.
-
Technical Session on “Forging Ahead with Resilience” for Boards of Directors of Licensed Banks
டிஜிட்டல் யுகத்தில் சவால்களை முனைப்புடன் எதிர்கொள்ளக்கூடிய வலுவானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது இலங்கையில் தொழிற்படும் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளினதும் பணிப்பாளர் சபை, முதன்மை நிறைவேற்று அலுவலர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினர்களின் அறிவு மட்டங்களை மேலும் மேம்படுத்த தொழில்நுட்ப அமர்வொன்றை “தாக்குபிடிக்கும் விதத்தில் முன்னேறுதல்” என்ற தலைப்பில் 2018 நவெம்பர் 14ஆம் திகதியன்று ராஜகிரியவிலுள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தில் ஒழுங்குசெய்தது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - October 2018
தயாரிப்பு துறை கொ.மு.சுவின் அனைத்து துணைச்சுட்டெண்களும் செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் நடுநிலையான 50.0இற்கு மேலான பெறுமதியை பதிவு செய்து ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காண்பித்தது. ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடானது பிரதானமாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளிலான மேம்பாடொன்றினால்உந்தப்பட்டது. இதற்கு, விசேடமாக உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகால கேள்வி மீதான சாதகமான தோற்றப்பாடு செல்வாக்கு செலுத்தியிருந்தது. பருவகால போக்குடன் உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் தொழில்நிலையானது அதிகரித்திருந்த போதிலும், ஒட்டுமொத்த தொழில்நிலையானது மெதுவடைந்திருந்தது. இதற்கு,புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு சந்தையிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்வதில் உள்ள சிக்கல்கள் பிரதானமாக சான்று கூறின.
-
The Central Bank of Sri Lanka Requests the General Public to be Attentive to Financial Scams/Phishing Emails
மோசடியான தகவல்களைப் வழங்குகின்ற மின்னஞ்சல்கள்/ சமூக வலைத்தள செய்திகளூடாக பரப்பப்படுகின்ற நிதியியல் ஏமாற்றுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அண்மைக்கால வருத்தத்திற்குரிய முறைப்பாடுகள் மீது இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. நம்பகமான நிறுவனமொன்றிலிருந்து அத்தகைய மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக ஏமாற்றி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் புகைப்படம், இலச்சினை, இலங்கை மத்திய வங்கியின் மூத்த அலுவலர்களின் பெயர்கள் என்பன மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.
-
Monetary Policy Review - No. 7 of 2018
மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2018 நவெம்பர் 13இல் நடைபெற்ற அதனது கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 1.50 சதவீதப் புள்ளிகளால் 6.00 சதவீதமாகக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இந்தக் குறைப்பின் தாக்கத்தை நடுநிலைப்படுத்தும் நோக்கிலும் அதன் நடுநிலையான நாணயக் கொள்கை நிலைப்பாட்டைப் பேணுவதற்காகவும் நாணயச் சபையானது மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தை 75 அடிப்படைப் புள்ளிகளால் 8.00 சதவீதத்திற்கும் மத்திய வங்கியின் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளால் 9.00 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
பொருளாதாரமானது அதன் உள்ளார்ந்த நிலையை அடைந்து கொள்வதனை இயலுமைப்படுத்தும் வகையில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்துகின்ற பரந்த நோக்குடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரங்கள் மற்றும் உள்நாட்டு நிதியியல் சந்தையின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளின் கவனமான பகுப்பாய்வினைத் தொடர்ந்து நாணயச் சபையானது இத்தகைய தீர்மானத்திற்கு வந்துள்ளது..
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the Department of Motor Traffic
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பணம் தூயதாகக்ல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தலுடன் தொடர்பான புலனாய்வு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, 2018 நவெம்பர் 01ஆம் நாளன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை இலங்கை மத்திய வங்கியில் செய்து கொண்டது.
-
Appointment of New Deputy Governors
நாணயச் சபையானது கௌரவ நிதி அமைச்சின் உடன்பாட்டுடன் உதவி ஆளுநர்களான திரு. எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் எச்.ஏ. கருணாரத்ன ஆகியோரை 2018 ஒத்தோபர் 31ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக பதவியுயர்த்தியுள்ளது.
-
Erroneous News Articles on Money Printing
கடந்த சில நாட்களாக இலங்கை மத்திய வங்கி மூலமான அதிகரித்த பணம் அச்சிடுதல் தொடர்பான அண்மைய செய்திக் கட்டுரைகள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் ஈர்க்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியானது அத்தகைய கட்டுரைகளின் எண்ணக்கருக்களும் உண்மைகளும் ஒட்டுமொத்தமாக பிழையானதாகவும் தவறாக வழிநடாத்துவதாகவும் காணப்படுவதனால் பின்வரும் தெளிவுபடுத்தலினை வழங்கவிரும்புகின்றோம்.