இலங்கை மத்திய வங்கி அதன் 11 ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை 2018 திசெம்பர் 07ஆம் நாளன்று ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. இம்மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதார கொள்கை தொடர்பான கோட்பாட்டு மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் பல்லினத்தன்மைச் சூழலிலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறிந்த விடயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இவ்வாண்டின் மாநாடானது 'பணவீக்க இலக்கிடல் மற்றும் மத்திய வங்கியின் சுயாதீனம், பொறுப்புக்கூறும்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை" என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்டது.
-
Central Bank of Sri Lanka hold its 11th International Research Conference
-
Compensation Payments to the Depositors of The Standard Credit and Finance Ltd. under Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கு அமைய நிதி வியாபாரத்தினை மேற்கொள்வதற்காக ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட உரிமம் 2018.07.25ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச்செய்யப்படுள்ளது.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை துணையளித்தல் திட்டத்தின் கீழ் ஸ்டான்டட் கிறடிற் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு நட்டஈட்டினைக் கொடுப்பனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கை வைப்புக் காப்புறுதி ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும். விண்ணப்ப பிரமாணம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.
-
54th SEACEN Governors’ Conference / High-Level Seminar and the 38th Meeting of the SEACEN Board of Governors
இலங்கை மத்திய வங்கியானது 54வது தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடு/ உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர் சபையின் 38வது கூட்ட நிகழ்வினை 2018 நவெம்பர் 29 தொடக்கம் திசெம்பர் 02 வரை கொழும்பில் நடைபெறுவதற்கு அனுசரணை வழங்கியது. இந்நிகழ்வில் தென்கிழக்காசிய உறுப்பு மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மற்றும் பேராளர்கள் அத்துடன் நாணய மேலாண்மைச் சபையினரும் பங்கேற்றனர். பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவ பணிப்பாளர் மிட்சுஹிரோ புருசாவா முதன்மைப் பேச்சாளராக கலந்துகொண்டார்.
தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிதியியல், நாணய மற்றும் வங்கித்தொழில் கருமங்களில் புரிந்துணர்வினை பாரியளவில் ஊக்குவிப்பதற்கு முன்னணியான பங்கொன்றை ஆற்றுகின்றது. 1982இல் நிறுவப்பட்ட தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது கற்றல் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சிப் பணி மற்றும் வலையமைப்பாக்கம் என்பன ஊடாக ஆசிய பசுபிக்கின் மத்திய வங்கிகளுக்கும் நாணய மேலாண்மைச் சபைகளுக்கும் பணியாற்றுகின்றது.
-
CBSL Disputes the Rating Agencies’ Latest Rating Decisions
இலங்கையின் நீண்டகாலத் தரமிடலை ‘B+’ (உறுதியான தன்மை) இலிருந்து ‘B’ (உறுதியான தன்மை) தரம் குறைப்பதற்காக 2018 திசெம்பர் 03ஆம் நாளன்று பிட்ஜ் ரேட்டிங்கினாலும் 2018 திசெம்பர் 4ஆம் நாளன்று ஸ்டான்டட் அன்ட் புவரினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாட்டின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளின் மீதான ஊர்ஜிதப்படுத்தப்படாத அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.
-
Inflation in February 2016
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் (2013 = 100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 சனவரியில் -0.7 சதவீதத்திலிருந்து 2016 பெப்புருவரியில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு முக்கிய பங்களிப்பாளராக உணவல்லா வகை காணப்பட்டது. வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடை மற்றும் காலணி; தளபாடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வழமையான வீட்டு பேணல்கள்; நலம்; போக்குவரத்து மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகளின் துணைத் துறைகளில் கணிசமான அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. இது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் உணவு வகையில் அவதானிக்கப்பட்ட ஒட்டுமொத்த விலை வீழ்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டது.
-
External Sector Performance - September 2018
2018 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அழுத்தமொன்றிற்கு உட்பட்டது. வர்த்தகக் கணக்கில் காணப்பட்ட விரிவடைந்த பற்றாக்குறை மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடுகள் வெளிச்செல்வதற்கு காரணமாக அமைந்த ஐ.அ.டொலர் வலுவடைந்தமை என்பன இம்மாதத்தில் சென்மதி நிலுவையினை மோசமாகப் பாதித்தன. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பை விஞ்சிக் காணப்பட்டது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தையின், வெளிநாட்டு முதலீடுகள் உலகளாவிய நிதியியல் சந்தைகள் உறுதியடைந்தமைக்கு பதிலிறுத்தும் விதத்தில் வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் செத்தெம்பர் மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகளில் ஒரு சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டியது.
-
A Commemorative Coin to Mark the 75th Anniversary of Sri Lanka Signal Corps
இலங்கை மத்திய வங்கி, இலங்கை சமிக்ஞை படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாகவும் 75 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக நாட்டிற்கு அது ஆற்றிய அரும் பணிக்கு அங்கீகாரமளிக்கும் விதத்திலும் ரூ.10 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை வெளியிட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்தி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது.
இந்நாணயக் குத்தியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே சுற்றோட்டத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளுடன் சேர்ந்து கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாகவிருக்கும்.
-
Issuance of a New Circulation Standard Coin Series
இலங்கை மத்திய வங்கி, நாணயக் குத்திகளின் வார்ப்புச் செலவினைக் குறைத்தல், நாணயக் குத்திகளின் பாவனைக் காலத்தினை அதிகரித்தல், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தன்மையினை வழங்கல், கட்புல ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இலகுவாக அடையாளம் காணக்கூடிய தன்மையை வழங்கி ஆகியவற்றின் குறிக்கோள்களுடன் ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய முகப்புப் பெறுமதியில் புதிய நாணயக் குத்தித் தொடரை சுற்றோட்டத்திற்கு விட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்திகளைக் கொண்ட பொதி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது.
நாணயக் குத்திகள் 2018 திசெம்பர் 3ஆம் நாளிலிருந்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். இப்புதிய நாணயக் குத்திகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட இதே நாணய இனக்குத்திகளுடன் சேர்ந்து சுற்றோட்டத்திலிருக்கும்.
-
Monetary Policy Review - March 2016
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக தரவுகளின்படி, உண்மை நியதிகளில் 2015இல் இலங்கைப் பொருளாதாரம் முன்னைய ஆண்டின் 4.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. 2015இல் பொருளாதாரத்தின் விரிவிற்கு, 2015ஆம் காலப்பகுதியில் 5.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த பணிகளுடன் தொடர்பான நடவடிக்கைகளே முக்கியமாக உதவியளித்தன. வேளாண்மை மற்றும் கைத்தொழிலுடன் தொடர்பான நடவடிக்கைகளும் முறையே 5.5 சதவீதத்தினாலும் 3.0 சதவீதத்தினாலும் விரிவடைந்து இவ்வாண்டின் வளர்ச்சிக்கு நேர்க்கணியமாகப் பங்களித்துள்ளன. 2015இன் வளர்ச்சிக்கு நுகர்வுக் கேள்வியில் ஏற்பட்ட அதிகரிப்பு பெருமளவிற்குத் தூண்டுதலாக அமைந்த வேளையில் முதலீட்டு நடவடிக்கைகள் வீழ்ச்சியைக் காட்டின.
-
Withdrawal of Primary Dealership by The Hongkong and Shanghai Banking Corporation Ltd
இல. 24, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01இல் அமைந்துள்ள ஹொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்ரேசன், 2016 ஏப்பிறல் 01ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், முதனிலை வணிகராக தொழிற்படுவதனை நிறுத்திக் கொள்கின்றமை பற்றி பொதுமக்களுக்கு இத்தால் அறியத்தரப்படுகிறது. எனினும், ஹொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்ரேசன் பத்திரங்களற்ற பிணையங்களில் முதனிலை நேரடி பங்கேற்பாளராக தொடர்ந்தும் பணியாற்றும் என்பதுடன் வாடிக்கையாளர் சார்பில் பத்திரங்களற்ற பிணையங்களை கொடுக்கல்வாங்கல் செய்வதிலும் லங்காசெகுயரில் வாடிக்கையாளர் கணக்குகளைப் பேணுவதிலும் தொடர்ந்தும் ஈடுபடும்.