தித்வா புயலின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவின் இலங்கைக்கான அண்மைய விஜயத்தின் இறுதியில், பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2026 சனவரி 28 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
-
IMF Staff Concludes Visit to Sri Lanka
-
The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டுத்துறை மற்றும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் ஆகியவற்றில் பரிணமிக்கின்ற அபிவிருத்திகள் மற்றும் தோற்றப்பாட்டை பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடானாது பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதற்குத் துணையளிக்குமென சபை கருதுகின்றது.
-
SL Purchasing Managers’ Index (PMI) – December 2025
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 திசெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 திசெம்பரில் 60.9 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டியது. மாதத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட மோசமான வானிலையுடன் தொடர்புடைய இடையூறுகளுக்கு மத்தியில், பிரதானமாக பருவகால கேள்வியினால் துணையளிக்கப்பட்டு, இவ் அதிகரிப்பு அனைத்து துணைச் சுட்டெண்களுக்கும் சாதகமாக பங்களித்திருந்தது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2026 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
-
Extension of the Term of the Administrator Appointed to Nation Lanka Finance PLC under the Banking (Special Provisions) Act, No. 17 of 2023
2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியிற்கு நியமிக்கப்பட்ட நிருவாகத்தத்துவக்காரரான திரு. பி டபிள்யு டி என் ஆர் ரொட்ரிகோ என்பவரின் பதவிக்காலத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது.
2025.07.04ஆம் திகதியிட்ட 2443/57ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் விடுக்கப்பட்ட கட்டளையின் ஊடாக முதலில் நியமிக்கப்பட்ட திரு. ரொட்ரிகோ 2026.01.04ஆம் திகதியிலிருந்து 2026.07.03ஆம் திகதி வரையான மேலும் ஆறு (06) மாத காலப்பகுதியொன்றிற்கு இப்பொறுப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்.
-
CCPI based headline inflation remained unchanged in December 2025
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2025 திசெம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது. டித்வா புயலின் காரணமாக 2025 திசெம்பரில் கணிசமாக மாதத்திற்கு மாத விலைகளில் அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்கு பிரதானமாக துணையளித்திருந்தது.
உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 திசெம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்ட அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) நவெம்பரில் பதிவாகிய 1.7 சதவீதத்திலிருந்து 2025 திசெம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது.
-
External Sector Performance – November 2025
நடைமுறைக் கணக்கானது முன்னைய இரண்டு மாதங்களில் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்ததன் பின்னர் 2025 நவெம்பரில் மிகையொன்றிற்குத் திரும்பலடைந்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,678 மில்லியனாகக் காணப்பட்டது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது. மேலும், 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்தது.
-
Sri Lanka PMI - Construction increased in November 2025
நடைமுறைக் கணக்கானது முன்னைய இரண்டு மாதங்களில் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்ததன் பின்னர் 2025 நவெம்பரில் மிகையொன்றிற்குத் திரும்பலடைந்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,678 மில்லியனாகக் காணப்பட்டது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது. மேலும், 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்தது.
-
Closure of Public Debt Department of the Central Bank of Sri Lanka
இலங்கை மத்திய வங்கி 2026 சனவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப் படுகடன் திணைக்களத்தை மூடி, பொதுப் படுகடன் திணைக்களத்தின் லங்கா செக்குயர் பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்திற்கு இடமாற்றுவதாக அறிவிக்கின்றது.
-
Administrative Penalties imposed by the Financial Intelligence Unit on Reporting Institutions from July to September 2025
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றினைப் பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.








