இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவுத் திட்டத்தின் கீழ் மேலதிக நட்டஈட்டுக் கொடுப்பனவு ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு 2021.04.12ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என்பதை இலங்கை மத்திய வங்கி, த பினான்ஸ் பிஎல்சியின் வைப்பாளர்களுக்கு/ சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கு அறியத்தருகின்றது.
-
Payment of Additional Compensation under the Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme
-
Public awareness on Risks in investing in Virtual Currencies in Sri Lanka
பன்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் மெய்நிகர் நாணயத்தின் பயன்பாடு தொடர்பான அண்மைய விசாரணைகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதுடன் சேர்ந்து காணப்படும் இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகிறது.
-
Central Bank commences the payment of increased compensation to the depositors of Failed Finance Companies
சென்றல் இன்வெஸ்மன்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், த ஸ்டான்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் கம்பனி பிஎல்சி, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி ஆகியவற்றின் வைப்பாளர்களுக்குஃ தொடர்புடைய சட்ட பூர்வமான பயன்பெறுநர்களுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் ரூ.500,000 கொண்ட அதிகரிக்கப்பட்ட நட்டஈட்டுத் தொகையினை கொடுப்பனவு செய்வதனை இலங்கை மத்திய வங்கி தொடங்கியுள்ளது.
-
The Central Bank of Sri Lanka continues its Accommodative Monetary Policy Stance
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2021 ஏப்பிறல் 7ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதத்திலும் 5.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானத்திருக்கிறது. சபையானது பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளையும் மிகக் கவனமாகப் பரிசீலனையில் கொண்டதன் பின்னர் இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. சபையானது தொடர்ந்தும் குறைந்த வட்டி வீத அமைப்பினைப் பேணுவதற்கு தொடர்ந்தும் கடப்பாடு கொண்டிருப்பதன் மூலம் தற்போது நிலவும் தாழ்ந்த வட்டி வீதச் சூழல் மற்றும் நன்கு நிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றின் பின்னணியில் உறுதித்தன்மை வாய்ந்த பொருளாதார மீட்சியொன்றிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு உறுதியளிக்கிறது.
-
Erroneous News Report on Debt Service Payments on account of Sri Lanka Development Bonds and Foreign Currency Loans from Domestic Banks
உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் தொடர்பிலான கடன் நிலுவைகளின் தீர்ப்பனவு திட்டமிடப்பட்டு தாமதப்படுத்தப்படுகின்றது என இன்று குறித்த நாளிதழொன்று தவறான அத்துடன் அடிப்படையற்ற செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கி ஏமாற்றத்துடன் அவதானம் செலுத்துகின்றது.
-
CCPI based Inflation increased to 4.1 per cent in March 2021
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 பெப்புருவரியின் 3.3 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, 2020 மாச்சில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபரத் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாகும். அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 பெப்புருவரியின் 7.9 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 9.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 பெப்புருவரியின் 1.3 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 1.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 பெப்புருவரியின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 மாச்சில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
-
The Central Bank of Sri Lanka enters into a Bilateral Currency Swap Agreement with the People’s Bank of China
இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காகவும் இருபுடை நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைச் செய்துகொண்டன. சீன மக்கள் குடியரசு இலங்கையின் மிகப்பெரிய இறக்குமதி மூலமாக தொடர்ந்தும் இருந்துவருகிறது. 2020இல் சீனாவிலிருந்தான இறக்குமதிகள் ஐ.அ.டொலர் 3.6 பில்லியனாக விளங்கின. (இலங்கையின் இறக்குமதிகளில் 22.3 சதவீதம்).
-
NCPI based Inflation increased in February 2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 சனவரியின் 3.7 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 4.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. இதன்படி, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 சனவரியின் 5.9 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 6.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 சனவரியின் 1.8 சதவீதத்திலிருந்து 2021 பெப்புருவரியில் 1.9 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.
-
Increase of the Maximum Compensation Payment under the Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme (SLDILSS)
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை ரூ.600,000/- இருந்து ரூ.1,100,000/- இற்கு ரூ.500,000/- ஆல் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு, அத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்யும் அல்லது இடை நிறுத்தும் சந்தர்ப்பத்தில் மேலதிக நிவாரணத்தை வழங்குவதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, நாணயச்சபையால் உரிமங்கள் இரத்து செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்திவைக்கப்பட்ட சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (சி.ஐ.எவ்.எல்), த ஸ்ராண்டெட் கிறெடிற் பினான்ஸ் லிமிடெட் (ரி.எஸ்.சி.எவ்.எல்), ரி.கே.எஸ் பினான்ஸ் லிமிடெட் (ரி.கே.எஸ்.எவ்.எல்), த பினான்ஸ் கம்பனி பிஎல்சி (ரி.எவ்.சி), ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட் (ஈ.ரி.ஐ.எவ்.எல்) மற்றும் ஸ்வர்ணமஹால் பினான்சியல் சேர்வீசஸ் பிஎல்சி (எஸ்.எவ்.எஸ்.பி) ஆகிய ஆறு (6) நிதி நிறுவனங்களின் வைப்பாளர்கள் திருத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.
-
Sri Lanka Purchasing Managers’ Index - February 2021
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் பெப்புருவரியில் விரிவடைந்தன.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் விரிவடைதல் காரணமாக 2021 பெப்புருவரியில் 59.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து அதன் விரிவடைதலில் நிலைத்திருந்தது. மேலும், ஒட்டுமொத்த தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணையும் உயர்வான மட்டமொன்றில் நிலைத்திருப்பதற்குத் துணையளித்து கொள்வனவுகளின் இருப்பு அத்துடன் தொழில்நிலை அதேபோன்று நிரம்பலர் விநியோக நேரம் என்பன விரிவடைந்து காணப்பட்டன.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண் 2021 பெப்புருவரியில் 56.5 இற்கு அதிகரித்து பணிகள் துறை மேலும் மேம்படுவதனை எடுத்துக்காட்டியது. இவ்வதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகளில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் துணையளித்திருந்தன.