கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலுடன் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுமுகமாக 2020 மாச்சு தொடக்கம் இலங்கை மத்திய வங்கி பல சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டஇசைவு தாமதகாலம், கடன் மறுசீரமைப்பு/ மீள்அட்டவணைப்படுத்தல், கடன் அறவீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துதல், குறைந்த செலவில் மூலதனக் கடன்கள், சில வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்காக கட்டணங்கள் மற்றும் அறவீடுகளைத் தள்ளுபடி செய்தல் போன்றவற்றை இச்சலுகைகள் உள்ளடக்குகின்றன. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அத்துடன் சுற்றுலாத் துறை, போக்குவரத்து, தயாரித்தல், சேவைகள், கமத்தொழில், நிர்மாணம், ஆடை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள ஏனைய வியாபாரங்கள் உள்ளடங்கலாக தனிப்பட்டவர்களுக்கு இச்சலுகைகள் வழங்கப்பட்டன.
-
Concessions to Affected Borrowers of Licensed Banks amidst the Prevailing Extraordinary Macroeconomic Circumstances
-
Sri Lanka Purchasing Managers’ Index - June 2022
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 யூனில் குறைவடைந்தன.
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 2022 யூனில் வீழ்ச்சியடைந்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் பின்னடைவினை எடுத்துக்காட்டின. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்திலிருந்து 6.2 சுட்டெண் புள்ளிக்களைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 யூனில் 44.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. வழங்குநர் விநியோக நேரம் தவிர அனைத்து துணைச் சுட்டெண்களிலும் ஏற்பட்ட குறைவினால் இது தூண்டப்பட்டிருந்தது.
பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 யூனில் 40.3 சுட்டெண் பெறுமதிக்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. புதிய வியாபாரங்கள், தொழில்நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் வீழ்ச்சிகள் இதற்குப் பிரதான காரணமாக அமைந்தது.
-
Public Awareness in Relation to the Use of Virtual Currencies in Sri Lanka
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சந்தைகளில் மெய்நிகர் நாணய பயன்பாட்டுடன் தொடர்புடைய அண்மைய அபிவிருத்திகளையும் அதேபோன்று, மெய்நிகர் நாணயத்துடன் தொடர்புடைய விசாரணைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு பின்வருவனவற்றை தெரிவிக்க விரும்புகின்றது.
மெய்நிகர் நாணயங்கள், தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் பெருமளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் ரீதியான பெறுமதியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இலத்திரனியல் ரீதியாக வர்த்தகப்படுத்தப்படக் கூடியவையாகும்.
-
External Sector Performance - May 2022
இறக்குமதிச் செலவினம் 2022 மேயில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் மெதுவடைந்து காணப்பட்டன. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் அதிகரித்து காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 மே மாத காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட திரவத்தன்மை அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு, காசு எல்லைத் தேவைப்பாடுகளை மத்திய வங்கி 2022 மேயில் விதித்தவேளையில், திறந்த கணக்கு மற்றும் சரக்குக் கொடுப்பனவு நியதிகள் மீதான கட்டுப்பாடு போன்றவற்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இவ் வழிமுறைகள், முறைசாரா சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தைச் செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியைச் சுருக்குவதற்கும் உதவி புரிந்தன. அதேவேளை, சந்தை வழிகாட்டலுடன் உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் அழுத்தங்களை நிர்வகிக்க அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் உதவியளிக்கப்பட்டு வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 359 ரூபாவாகக் காணப்பட்டது.
-
Extending the Order issued on Possession of Foreign Currency
இலங்கையுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு உடைமையிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை அதிகாரமளிக்கப்பட்ட வணிகரொருவரிடம் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) வைப்புச் செய்வதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை 2022.07.26 அன்று வரை மேலும் 14 வேலை நாட்களால் நீடித்து 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணித் திட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சர் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.
மேலதிகத் தகவல்களுக்கு 2287/16ஆம் இலக்க, 2022 யூலை 05ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை (அதிவிசேடம்) அறிவித்தலில் வெளியிடப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளையை நீங்கள் பார்க்கலாம். இதனை www.dfe.lk என்ற இணையத்தளம் வாயிலாக தரவிறக்கம் செய்யலாம்/அணுகலாம்.
-
The Central Bank of Sri Lanka further tightens its Monetary Policy Stance
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 யூலை 06ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதத்திற்கும் 15.50 சதவீதத்திற்கும் 100 அடிப்படை புள்ளிகளால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மையில் எதிர்பார்த்ததை விட உயர்வாக முதன்மைப் பணவீக்கம் உயர்வடைந்தமை அத்துடன் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் அதிகரித்த விடாப்பிடியான உயர்வான பணவீக்கம் என்பவற்றை கவனத்திற் கொண்டு, நாணயக் கொள்கையினை மேலும் இறுக்கமடையச் செய்தலானது ஏதேனும் பாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் அதிகரிப்பதனைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானதாகவிருக்குமென சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில், சபையானது அண்மைக்காலத்தில் அனைத்து பொருளாதார துறைகளுக்கிடையிலும் ஏதேனும் விலை அழுத்தங்கள் உயர்வடைதலின் பரந்தளவான பாதகமான விளைவுகளுக்கு எதிராக, ஏனையவைகளுக்கு மத்தியில் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகள் அத்துடன் நிதியியல் துறை செயலாற்றம் என்பவற்றின் மீது இறுக்கமான நாணய நிலைமைகளின் தாக்கத்தின் மீது கவனம் செலுத்தியிருந்தது. அனைத்து காரணிகளையும் பரிசீலனையிற் கொள்கையில், இக்கொள்கை சீராக்கமானது நடுத்தரகாலத்தில் பணவீக்க எதிர்பார்க்கைகளை முதன்மைப் பணவீக்கத்தின் இலக்கிடப்பட்ட அளவிற்கு அண்மித்து நிலைநிறுத்துவதற்கு உதவுவதற்கு வழிகாட்டுகின்ற அதேவேளை பொருளாதாரத்தில் ஏதேனும் ஏதுவாகின்ற கேள்வி அழுத்தங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துமென சபை அபிப்பிராயப்பட்டுள்ளது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமையச் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2022 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்
-
Present CBSL Governor Re-appointed
2022 யூலை 04ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 06 ஆண்டு கால தவணைக்கு முனைவர் பி நந்தலால் வீரசிங்க அவர்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மீள நியமித்திருக்கிறார் என்பதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.
-
IMF Staff Concludes Visit to Sri Lanka
மெஸர்ஸ். பீடர் புருர் மற்றும் மசாகிரோ நொசாகி ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் குழுவானது
இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி மற்றும் அதிகாரிகளின் விரிவான பொருளாதார சீராக்க நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை கலந்துரையாடுவதற்காக 2022 யூன் 20 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் திருமதி ஆன்-மரி கல்ட்-ஊல்ப் கொள்கைக் கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருந்தார்.விஜயத்தின் நிறைவில், மெஸர்ஸ். புருர் மற்றும் நொசாகி ஆகியோர் பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர்:
-
CCPI based headline inflation recorded at 54.6% on year-on-year basis in June 2022
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 மேயின் 57.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 80.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 30.6 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 42.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.