கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2026 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களினை எடுத்துகாட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு) 2026 செத்தெம்பரில் 53.0 சுட்டெண் பெறுமதியொன்றினைப் பதிவுசெய்து. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தயாரிப்பு நடவடிக்கைகள் மாதகாலப்பகுதியில் அதையொத்த வேகத்தில் தொடர்ந்தும் விரிவடையுமென இது எடுத்துக்காட்டுகின்றது.








