கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 செத்தெம்பரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
-
Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - September 2024
-
The Central Bank of Sri Lanka Releases the Financial Stability Review for the Year 2024
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது.
-
Strengthening Corporate Governance Practices in Licensed Banks
இலங்கை மத்திய வங்கி, உரிமம்பெற்ற வங்கிகளுக்காக கம்பனி ஆளுகை தொடர்பில் 2024ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளை 2024.09.30 அன்று வழங்கியமை பற்றிய அறிவித்தலை விடுப்பதற்கு விரும்புகின்றது. இப்பணிப்புரைகள், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினதும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளினதும் (இதனகத்துப் பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) கம்பனி ஆளுகை செயன்முறைகளையும் நடைமுறைகளையும் வலுப்படுத்துகின்ற நோக்குடன் விடுக்கப்பட்டதுடன் இதன்மூலம் வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் அத்துடன் ஒட்டுமொத்தமாக நிதியியல் முறைமையினையும் மேம்படுத்தும் பொருட்டு, பொறுப்புமிக்கதாகவும் பொறுப்புக்கூறும் விதத்திலும் வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு வசதியளிக்கப்படுகின்றது.
-
CCPI based headline inflation dipped into the negative territory in September 2024
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2015 தொடக்கம் முதன் முறையாக 2024 செத்தெம்பரில் 0.5 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்து எதிர்மறையான புலத்தினுள் நுழைந்தது.
-
External Sector Performance August 2024
2024 ஓகத்தில் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்களின் மெதுவடைதலிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வலுவான உட்பாய்ச்சல்கள் மற்றும் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பவற்றுடன் வெளிநாட்டுத் துறையின் நேர்மறையான உத்வேகம் தொடர்வடைந்தது.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – August 2024
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), முன்னைய மாதத்தில் அடையப்பெற்ற குறிப்பிடத்தக்க உயர்வான மட்டத்தினைவிட 2024 ஓகத்தில் மெதுவான வேகத்தில் விரிவடைந்து, 51.4 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. மேலும், அநேகமான ஏனைய சுட்டெண்களும் நடுநிலையான அடிப்படை அளவுமட்டத்தை அண்மித்து காணப்பட்டு, கட்டடவாக்கத் தொழிற்துறையின் தொழிற்பாடுகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் பரந்தளவில் மாற்றமின்றிக் காணப்பட்டதை எடுத்துக்காட்டின.
-
Release of “Sri Lanka Socio-Economic Data – 2024” Publication
‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2024’ என்ற இலங்கை மத்திய வங்கியின் சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
-
The Central Bank of Sri Lanka maintains policy interest rates at their current levels
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 செத்தெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
-
Functioning of Banks on 23rd September 2024
2024.09.23ஆம் தினம் அரசாங்கத்தினால் விசேட பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார் என்பதனைக் குறிப்பிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் மூலம் வழங்கப்பட்ட 2024.09.21ஆம் திகதியின் விசேட ஊடக அறிக்கையுடன் இது தொடர்புடையது.
-
Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - August 2024
2024 ஓகத்தில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 ஓகத்தில் 55.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. இது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதத்தில் காணப்படுகின்ற போதிலும் தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. தொழில்நிலை தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களும் ஓகத்தில் நடுநிலையான எல்லைக்கு மேல் இருந்தன.