• CCPI based headline inflation remained unchanged in November 2025

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக உயர்வடைந்ததன் பின்னர், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 நவெம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது.  

     உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2025 ஒத்தோபரில் பதிவாகிய 3.5 சதவீதத்திலிருந்து 2025 நவெம்பரில் 3.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2025 ஒத்தோபரில் பதிவாகிய 1.4 சதவீதத்திலிருந்து 2025 நவெம்பரில் 1.7 சதவீதமாக அதிகரித்தது. 

  • External Sector Performance – October 2025

    இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக 2025 ஒத்தோபரில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது. இருப்பினும், 2025இன் முதலாவது பத்து மாதங்களிற்கான ஒன்றுசேர்ந்த நடைமுறைக் கணக்கு மிகையானது ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

    வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முக்கியமாக, இறக்குமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பின் காரணமாக 2025 ஒத்தோபரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது.

  • Sri Lanka PMI - Construction continued to expand in October 2025

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 ஒத்தோபரில் 64.3 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்தது. உயர்வான இந்த அளவீடு கடந்த மாதத்தின் உச்சநிலையைத் பின்பற்றிச்சென்று, கட்டுமான நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக சாதகமான  தோற்றப்பாடொன்றைக் குறித்துக்காட்டுகின்றது.

  • The Central Bank of Sri Lanka keeps the Overnight Policy Rate (OPR) unchanged

    நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் ஆகிய இரண்டிலும் பரிணமிக்கின்ற அபிவிருத்திகள் மற்றும் தோற்றப்பாட்டை கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதற்குத் துணையளிக்குமென சபை கருதுகின்றது. 

  • Notice to General Public on Prohibited Pyramid Schemes

    திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு “SGO/sgomine.com” என்பது தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவித்துள்ளது என உறுதிசெய்து தீர்மானித்துள்ளது.

  • SL Purchasing Managers’ Index (PMI) – October 2025

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒத்தோபரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.

    தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 ஒத்தோபரில் 61.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் அதிகரிப்பொன்றை எடுத்துக்காட்டுகின்றது. அனைத்து துணைச் சுட்டெண்களும் வளர்ச்சிக்காக சாதகமாக பங்களித்து, இவ்வதிகரிப்பானது பரந்த அடிப்படையினைக் கொண்டு காணப்படுகின்றது. 

  • Public Consultation on Amendments to the Finance Business Act, No.42 of 2011 (FBA)

    நிதிக் கம்பனிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையினை வலுப்படுத்தல், அதிகாரமளிக்கப்படாத நிதித்தொழில்களை விசாரித்தல் மற்றும் வழக்குத்தொடுத்தல், ஒப்பேறாத நிதிக் கம்பனிகளை தீர்த்துவைத்தல் மற்றும் ஒடுக்குதல் என்பவற்றுக்கான தேவைகளை அங்கீகரித்து இலங்கை மத்திய வங்கி நிதித்தொழில் சட்டத்திற்குத் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. 

  • CCPI based headline inflation further accelerated as expected towards the target in October 2025

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2025 ஒத்தோபரில் மேலும் அதிகரித்து, பணவீக்க இலக்கினை நோக்கி தொடர்ந்தும் முன்னேற்றமடைவதைக் காண்பிக்கின்றது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, (ஆண்டிற்கு ஆண்டு) 2025 செத்தெம்பரின் 1.5 சதவீதத்திலிருந்து 2025 ஒத்தோபரில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

  • Sri Lanka PMI - Construction increased in September 2025

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 செத்தெம்பரில் 67.6 இனை அடைந்து 2021இன் பிந்திய பகுதி தொடக்கம் அவதானிக்கப்பட்ட நடவடிக்கையில் வலுவான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. தொடர்ச்சியாக கருத்திட்ட வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றமை கட்டடவாக்கத்துறையில் வளர்ச்சிக்கு உறுதியாக துணையளித்துள்ளது என பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.

  • External Sector Performance – September 2025

    இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகளைத் தொடர்ந்து, 2025 செத்தெம்பரில் மாதாந்த நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்தது. எனினும், முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒன்றுசேர்ந்த நடைமுறைக்கு கணக்கு மிகை ஐ.அ.டொலர் 1.9 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

    வாகன இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு இறக்குமதிச் செலவினம் ஐ.அ.டொலர் 2 பில்லியனை விஞ்சியமையினால், வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு விரிவாக்கமொன்றைப் பதிவுசெய்தது. 

Pages