2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி.
-
Financial Intelligence Unit of Sri Lanka Entered into a Memorandum of Understanding with Department of Inland Revenue
-
Monetary Policy Review - No. 7 of 2017
Considering developments in the domestic and international macroeconomic environment, the Monetary Board, at its meeting held on 06 November 2017, was of the view that the current monetary policy stance is appropriate. Accordingly, the policy interest rates of the Central Bank of Sri Lanka will remain unchanged at their current levels.
The decision of the Monetary Board is consistent with the objective of maintaining inflation at midsingle digit levels over the medium term and thereby facilitating a sustainable growth trajectory. The rationale underpinning the monetary policy stance is set out below.
-
Clarification on Employment Numbers Referred to in the Central Bank Annual Reports
2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் நிலை எண்ணிக்கைகளை மேற்கோள் காட்டி வெளிவருகின்ற ஊடக அறிக்கைகள் மீது இலங்கை மத்திய வங்கி அவதானம் செலுத்தியுள்ளது.
-
SL Purchasing Managers’ Index Survey - October 2016
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 செத்தெம்பரில் 57.7 உடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் 56.5 ஆகக் காணப்பட்டது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது 2016 ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது. செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களின் செயலாற்றத்தில் காணப்பட்ட மிதமான வேகமே முக்கிய காரணமாகும். கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண் ஒத்தோபரில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து எதிர்வரும்; காலத்திற்காக இருப்புக்கள் குவிக்கப்பட்டமையினை எடுத்துக் காட்டிய வேளையில் நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவில் அதிகரித்தது. தொழில்நிலைத் துணைச் சுட்டெண்ணும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் காட்டியது.
-
The International Monetary Fund Releases the Second Tranche of US Dollars 162.6 million under the Extended Fund Facility
பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முதலாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 162.6 மில்லியன்) பெறுமதியான இரண்டாவது தொகுதியினை 2016 நவெம்பர் 18ஆம் நாளன்று பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
-
Inflation in October 2016
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 செத்தெம்பரின் 4.7 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 ஒத்தோபரின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பஙக்ளித்துள்ளன.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றின்மீது அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 செத்தெம்பரின் 3.8 சதவீதத்திலிருந்து 2016 ஒத்தோபரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.
-
Provincial Gross Domestic Product - 2016
2016ஆம் ஆண்டிற்கான மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மூலம் தொகுக்கப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியினை பிரிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் கணிக்கப்பட்டிருக்கிறது. மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில், மொ.உ. உற்பத்தியிலுள்ள ஒவn; வாரு தொகுதி விடயத்தினதும் பெறுமதியானது மாகாண மட்டத்தில் தொடர்பான குறிகாடடி;களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டுள்ளது.
-
Monetary Policy Review - November 2016
எதிர்பார்க்கப்பட்டவாறு, 2015 இறுதியிலிருந்து மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்டுவரும் நாணயக் கொள்கை வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2016 செத்தெம்பர் காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத் தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி முன்னைய ஆண்டின் 27.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் 25.6 சதவீதத்தினைப் பதிவு செய்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் வீழ்ச்சி ஏற்பட்டபோதும் விரிந்த பணத்தின் (M2b) வளர்ச்சி முன்னைய மாதத்தின் 17.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்; 18.4 சதவீதத்திற்கு விரிவடைந்தமைக்கு வர்த்தக வங்கிகளிலிருந்தான அரச துறையின் கடன்பாடுகள் இம்மாத காலப்பகுதியில் விரிவடைந்தமையே காரணமாகும்.
-
Licensing, Regulation and Supervision of Companies Carrying on Microfinance Business
தற்பொழுது ஒழுங்குமுறைப்படுத்தப்படாதிருக்கும் நுண்நிதியளிப்பு நிறுவனங்களை உள்ளடக்கும் விதத்தில் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்றினை வழங்கும் குறிக்கோளுடன் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் நோக்கம் குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கும் நுண்பாக தொழில்முயற்சிகளுக்கும் நிதியியல் பணிகள் வழங்கப்படுவதனை மேம்படுத்தல், நிதியியல் பணிகள் கிடைப்பதனை அதிகரித்தல், நுண்நிதியளிப்பு நிறுவனங்களின் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் முறைமையினையும் வலுப்படுத்துதல், பரந்தளவு நிதியிடல் மூலங்களைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நுண்நிதியளிப்பு நிறுவனங்களுக்கு வசதியளித்தல், நுகர்வோர் பாதுகாப்பினை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பானதும் உறுதியானதுமான நிதியியல் முறைமையினை மேம்படுத்துதல் என்பனவாகும்.
-
Licensed Banks to enhance Minimum Capital by end 2020
பலமானதும் இயலாற்றல் மிக்கதுமான வங்கித்தொழில் துறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இந்நோக்கத்திற்காக கருத்திலெடுக்கப்பட்ட மூலதனமானது உயர் இழப்புக்களை ஈர்க்கும் இயலளவுள்ள உயர்தர மூலதனத்தினால் பெருமளவு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச மூலதன தேவைப்பாடுகளை உயர்த்துவது வங்கிகளின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை பலப்படுத்துவதற்காக இலங்கையில் பாசல் III இனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் என்பதுடன் வங்கித்தொழில் துறையின் திரட்சிப்படுத்தலுக்கும் வழிவகுக்கும். இதன்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கையில் நிறுவப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்பட இருக்கும் புதிய வங்கிகள் பின்வரும் மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவைப்படுத்தப்படுகின்றன: