• New Primary Issuance System for Treasury Bonds

    இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. 2017 யூலை 27 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், 2015 பெப்புருவரியிலிருந்து நடைமுறையில் காணப்படும் திறைசேரி முறிகளுக்கான முழுமையான ஏல அடிப்படையிலான வழங்கல் முறைமைக்கு பதிலாக இந்த புதிய முறைமை மாற்றியமைக்கப்படுகின்றது. புதிய முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கான பிரதான காரணமானது அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகளின் போது வினைத்திறனையும் வெளிப்படைத் தன்மையினையும ;மேலும் அதிகரிப்பதாகும். 

  • Statement Issued by the Central Bank of Sri Lanka on the Leakage of Customer Information by Hatton National Bank PLC

    இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களின்படி, 4,630 வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட சில வங்கித்தொழில் தகவல்களுடன் தொடர்புடைய இச்சம்பவமானது கவனக் குறைவினால் ஏற்பட்டதாகவே தோன்றுகின்றது என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தர விரும்புகின்றது. மேலும், இச்சம்பவத்திற்கு ஹற்றன் நஷனல் வங்கிக்குள் வாடிக்கையாளர் தகவல்களை முகாமை செய்வதிலும் பயன்படுத்துவதிலும் காணப்படும் உள்ளகக் குறைபாடுகளே காரணமென அவதானிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இவ்விடயமானது, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி இரண்டினாலும் மேலதிக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. 

  • Inflation in June 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மேயின் 7.1 சதவீதத்திலிருந்து 2017 யூனில் 6.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2017 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.1 சதவீதத்தில் மாறாது காணப்பட்டது. 

  • The International Monetary Fund to Release the Third Tranche of US Dollars 167.2 million under the Extended Fund Facility

    பன்னாட்டு நாணய நிதியமானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 167.2 மில்லியன்) பெறுமதியான மூன்றாவது தொகுதியினை 2017 யூலை 19ஆம் நாளன்று பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

  • 46th Meeting of the Board of Directors of the Asian Clearing Union Colombo, Sri Lanka, July 12-13, 2017

    இலங்கை மத்திய வங்கி 2017 யூலை 12

  • SL Purchasing Managers’ Index Survey - June 2017

    தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூன் மாதத்தில் 56.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 மே மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன் இதற்கு பாதகமான வானிலை நிலைமைகளினால் பகுதியளவில் செல்வாக்கு செலுத்தப்பட்ட புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட ஒரு குறைவே பிரதான காரணமாக அமைந்தன. இதன் விளைவாக மேலதிகமான இருப்பு மட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தில் ஒரு சிறிதளவான குறைவும் உணரப்பட்டது. இருப்பினும், தொழில்நிலை மட்டமானது முன்னைய மாதத்தில் உணரப்பட்ட சுருக்கத்திலிருந்து மீட்சியடைந்து ஒரு மேம்பாட்டினை காட்டியது.

  • Monetary Policy Review - No. 4 of 2017

    தற்பொழுது நிலவுகின்ற மற்றும் தோற்றம் பெறும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்ட பொருளாதாரச் சூழல்களைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை 2017 யூன் 22ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்தில் பேணுவதெனவும் தீர்மானித்தது.

    நாணயச் சபையின் தீர்மானமானது, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுதல் அதன் மூலம் நீடித்த வளர்ச்சி உத்வேகத்திற்கு வசதிப்படுத்தல் ஆகிய குறிக்கோள்களுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்டது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்த நியாயப்பாடு கீழே வழங்கப்படுகின்றது.

     

     

  • SAARCFINANCE Group Meeting and SAARCFINANCE Governors’ Symposium held in Colombo on 12 July 2017

     

  • 20th Annual Meeting of the Asia/Pacific Group on Money Laundering in Colombo, Sri Lanka during July 17-21, 2017

    பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசியபசுபிக்கின் 20ஆவது ஆண்டுக் கூட்டம் 2017 யூலை 17 – 21

  • A Commemorative Coin to Celebrate 150 Anniversary of Ceylon Tea

    Ceylon Tea இன் 150

Pages