வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம், 2018 ஏப்பிறல் 12, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரத்தக்க விதத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு அரசியல் யாப்பின் 70ஆம் உறுப்புரைக்கமைவாக சனாதிபதி அவரது அரசியலமைப்பு உரிமையினை பிரயோகித்துள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வு 2018 மே 08 அன்று ஆரம்பிக்கும். இக்காலப்பகுதியின் போது பிரேரணைகள் அல்லது வினாக்கள் எதுவும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமுடியாது என்பதுடன் பாராளுமன்றம் மூலமான ஏதேனும் முன்கூட்டிய நடவடிக்கைகள் செல்லுபடியானதாகவிருக்கும். பாராளுமன்றத்தினை ஒத்திவைத்தலானது அரசாங்கம் தொழிற்படுவதில் அல்லது இயங்குவதில் தாக்கம் எதனையும் கொண்டிராது.
-
Media Notice on Prorogation of Parliament of Sri Lanka
-
The Democratic Socialist Republic of Sri Lanka - US Dollars 2.5 billion International Sovereign Bond Offering
இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சார்பில் 5 ஆண்டுகாலத்திற்கான ஐ.அ.டொலர் 1.25 பில்லியன் கொண்ட புதிய முறிகளையும் 10 ஆண்டுகாலத்திற்கான மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட ஐ.அ.டொலர் 1.25 பில்லியன் முறிகளையும் முறையே 2023 ஏப்பிறல் 18ஆம் நாள் மற்றும் 2028 ஏப்பிறல் 18ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் சந்தைக்கு இலங்கை திரும்பியமையினை எடுத்துக்காட்டியது. முறிகள் மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிச் ரேடிங் என்பனவற்றினால் முறையே B1,B+ மற்றும் B+ இல் தரமிடப்பட்டுள்ளன.
-
External Sector Performance - January 2018
இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்கு மத்தியிலும் நிதியியல் கணக்கிற்கான உயர்வான உட்பாய்ச்சல்களுடன் 2018 சனவரியில் மேம்பாடொன்றினை எடுத்துக்காட்டியது. வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்த அதேவேளை இறக்குமதிகள் மீதான செலவினமும் மாதத்தின் போதான ஏற்றுமதி வருவாய்களின் செயலாற்றத்தினை கடந்து கணிசமாக அதிகரித்தது. எவ்வாறு இருப்பினும், கடந்த ஆண்டின் போது அவதானிக்கப்பட்ட மிதமான போக்கினை நேர்மாற்றி சுற்றுலாத்துறை வருவாய்கள் 2018 சனவரியின் போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. 2017இன் போது வேகக்குறைவொன்றினை அடையாளப்படுத்திய தொழிலாளர் பணவனுப்பல்களும் 2018 சனவரியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது.
-
Monetary Policy Review - No. 2 of 2018
பணவீக்கம் மற்றும் பணவீக்கத் தோற்றப்பாட்டின் சாதகமான அபிவிருத்திகள் அதேபோன்று உண்மையான மற்றும் உத்தேசிக்கப்பட்ட மொ.உ. உற்பத்தி வளர்ச்சியில் தற்போதுள்ள இடைவெளியினை விரிவடையச் செய்த எதிர்பார்க்கப்பட்டதனை விட தாழ்ந்த உண்மை மொ.உ. உற்பத்தி வளர்ச்சி என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு, நாணயச் சபை 2018 ஏப்பிறல் 03இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீத வீச்சின் மேல் எல்லையான துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் கடந்த அண்மைக் காலத்தில் உள்நாட்டுச் சந்தை வட்டி வீதங்களில் அவதானிக்கப்பட்ட தளம்பலினைக் குறைவடையச் செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாணயச் சபையின் துணைநில் கடன்வழங்கல் வீதத்தினைக் குறைப்பதற்கான தீர்மானம் பின்வரும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளினை அடிப்படையாகக் கொண்டது:
-
Willful Defacement, Alteration and Mutilation of Sri Lanka Currency Notes
வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பாரியளவான கோரிக்கைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றும் சேவையினை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
-
Launch of the Revamped Central Bank of Sri Lanka Corporate Website
இலங்கை மத்திய வங்கியின் திருத்தியமைக்கப்பட்ட நிறுவன வெப்தளம் 2018 மாச்சு 28ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெப்தள முகவரி https://www.cbsl.gov.lk.
-
Inflation in February 2018
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2018 சனவரியின் 5.4 சதவீதத்திலிருந்து 2018 பெப்புருவரியில் 3.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2017 பெப்புருவரியில் நிலவிய உயர்ந்த தளம் அதேபோன்று 2018 பெப்புருவரியில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சி என்பனவற்றின் சாதகமான நிரம்பல் நிலைமைகளின் காரணமாக 2018 பெப்புருவரியில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் மிகக்கூடியளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 சனவரியின் 7.6 சதவீதத்திலிருந்து 2018 பெப்புருவரியில் 7.2 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
-
SL Purchasing Managers’ Index - February 2018
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2018 சனவரி 51.7 சுட்டெண் புள்ளிகளிலிருந்து பெப்புருவரி மாதத்தில் 55.6 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, முன்னைய மாதகாலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட பருவகால மெதுவடைதலுக்கு பின்னரான தயாரிப்பு நடவடிக்கைகள் சனவரி 2018 உடன் ஒப்பிடுகையில் பெப்புருவரியில் ஒரு உயர்வான வீதத்தில் விரிவடைந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்ணின் விரிவாக்கத்தினால் உந்தப்பட்டது. புதிய கட்டளைகளின் அதிகரிப்பின் மூலம் உற்பத்தி துணைச்சுட்டெண்ணும் அதிகரித்திருந்தது. இருப்பினும், புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்போடு ஒப்பிடுகையில் பெப்புருவரி மாதத்தில் காணப்பட்ட குறைந்தளவிலான வேலை நாட்களின் எண்ணிக்கை காரணமாக ஒப்பீட்டளவில் குறைந்தளவிலேயே காணப்பட்டது.
-
IMF Staff Concludes the 2018 Article IV Mission with Sri Lanka and Discusses Progress of Economic Reform Program
நிறைவு செய்யும் அறிக்கையானது, உத்தியோக பூர்வ அலுவலர் (ஷஅல்லது தூதுக்குழு|) விஜயத்தின் இறுதியில் பெரும்பாலான உறுப்பு நாடுகளைப் போன்றே ப.நா. நிதிய அலுவலர்கள் ஆரம்பத்தில் கண்டறிந்த விடயங்களை விபரிக்கிறது. அலுவலர்கள் கண்காணித்த நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, அல்லது மற்றைய அலுவலர்களின் பொருளாதார அபிவிருத்திகளது கண்காணிப்பின் ஒரு பகுதியாக, ப.நா. நிதிய மூலவளங்களை (ப.நா.நிதியத்திலிருந்தான கடன்பாடு) பயன்படுத்துவதற்கான கோரிக்கையின் பின்னணியில், உடன்படிக்கையில் ப.நா.நிதிய உறுப்புரையின் உறுப்புரை ஐஏ இன் கீழ், பணிகள் கிரமமான (வழமையாக வருடாந்தம்) ஆலோசனைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இவ்வறிக்கையினை வெளியிடுவதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
-
Clarification on the Cancellation of Licence and Certificate of Registration Issued to Central Investments and Finance PLC
இலங்கை மத்திய வங்கி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கப்பட்ட உரிமத்தினையும் 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழையும் இரத்துச் செய்வது தொடர்பில் 2018.03.05 அன்று விடுத்த பத்திரிகை அறிவித்தல் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க விரும்புகின்றது. 2017.12.05 அன்று விடுக்கப்பட்ட எமது பத்திரிகை வெளியீட்டின் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இன் காப்புறுதி செய்யப்பட்ட அனைத்து வைப்புக்களுக்கும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதியின் கீழ் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 செலுத்தப்படும்.