2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற நிதியியல் கம்பனியான சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சியானது தவறான முகாமைத்துவம் மற்றும் கம்பனியில் இடம்பெற்ற பல்வேறு மோசடியான நடவடிக்கைகள் காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக கடுமையான நிதியியல் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. கம்பனியின் வைப்பாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமது பணத்தினை மீளப்பெறுவதற்கு முடியாமலிருக்கின்றனர். பல்வேறு உபாயங்களினூடாக கம்பனியினை மீளெழுச்சி பெறச்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. தற்போதைய நிலைமைகளைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் மேலும் தீங்கிழைப்பதாக அமையும்.
-
Central Investments and Finance PLC - Cancellation of Licence issued under the Finance Business Act No. 42 of 2011 and Certificate of Registration issued under the Finance Leasing Act No. 56 of 2000
-
The Central Bank Responds to Misleading News Reports on Future Interest Rate Movements
எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வினை எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கின்ற அண்மைய ஒரு சில ஊடக அறிக்கைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பிற்காக குறிப்பிட்ட அறிக்கைகள் ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்ட இறக்குமதிகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான அதிகரித்த வட்டி வீதங்கள் என்பனவற்றை காரணங்களாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.
-
Central Bank Releases Summary Trading Statistics on Government Securities Secondary Market Information for the First Time
அரச பிணையங்கள் சந்தையினை அபிவிருத்தி செய்வதற்கான மேலுமொரு கொள்கை வழிமுறையாக, மத்திய வங்கி இன்றிலிருந்து, இரண்டாந்தரச் சந்தையிலுள்ள அரச பிணையங்களின் உண்மையான வர்த்தகப்படுத்தல் தொடர்பில் வர்த்தகப்படுத்தல் புள்ளிவிபரங்களின் தொகுப்பினை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. 2016 ஓகத்து 1 இலிருந்து, அனைத்து முதனிலை வணிகர்களும் முக்கிய பன்னாட்டு நிதியியல் வர்த்தகப்படுத்தல் மற்றும் தகவல் இலத்திரனியல் தளமாக விளங்கும் புளும்போக்கினூடாக மத்திய வங்கியினால் ஒழுங்கு செய்யப்பட்ட வர்த்தகப்படுத்தல் தளத்தில் முதனிலை வணிகர்களுக்கிடையிலான வர்த்தகத்தினை மேற்கொள்ள வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் அனைத்து முதனிலை வணிகர்களும் ரூ.50 மில்லியனுக்கு மேற்பட்ட பெறுமதியினைக் கொண்ட அரச பிணையங்களின் அனைத்து உடனடி விற்பனைகளையும் ஒவ்nவாரு கொடுக்கல்வாங்கலும் முடிவடைந்த 30 நிமிடங்களுக்குள் இத்தளத்தின் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.
-
Land Price Index - Second Half of 2017
உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளை கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளை தொகுத்து பகுப்பாய்வு செய்கின்றது. இதற்கிணங்க, 1998 முதல் கொழும்பு மாவட்டத்தினை உள்ளடக்கி காணி விலைச் சுட்டெண் அரையாண்டுகளுக்கொரு தடவை தொகுக்கப்படுகிறது. காணி விலைச் சுட்டெண் தொகுக்கும் செயன்முறையில், இலங்கை மத்திய வங்கியானது கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின்1 சுமார் 50 நிலையங்களை உள்ளடக்கி இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் காணி விலைத் தரவுகளைப் பயன்படுத்துகின்றது. காணிப் பல்வகைப் பயன்பாட்டுத்தன்மை நோக்கிலும் ஒரேசீர்மை அமைப்பினைப் பேணுவதற்கும் வதிவிட, வர்த்தக ரீதியான மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று சுட்டெண்கள் வௌ;வேறாகக் கணிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது.
-
External Sector Performance - December 2017
இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது பிரதானமாக சென்மதி நிலுவை நிதியியல் கணக்குகளுக்கான உயர்வான உட்பாய்ச்சல்களுடன் 2017 திசெம்பரில் தொடர்ந்தும் மேம்பட்டது. 2017 திசெம்பரில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் உயர்வீதமொன்றில் அதிகரித்த போதிலும், இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதனை தோற்றுவித்தது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் வாயிலாக ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள், விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவினைக் குறித்த மட்டமொன்றில் கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தன. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன உட்பாய்ச்சல்கள், மாதத்தின் போது தொடர்ந்தும் மேம்பட்டன.
-
Inflation in January 2018
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 திசெம்பரின் 7.3 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, 2017 சனவரியில் நிலவிய உயர்ந்த தளமும் அதேபோன்று 2018 சனவரியில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சியும் காரணங்களாக அமைந்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 திசெம்பரின் 7.7 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 7.6 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
-
Sri Lanka Listing in the Financial Action Task Force and Measures Initiated by Sri Lanka to Improve Global AML/CFT Standards
-
SL Purchasing Managers’ Index Survey - January 2018
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் 59.1 சுட்டெண் புள்ளிகளிலிருந்து சனவரி மாதத்தில் 51.7 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, 2017ம் வருட காலப்பகுதியில் இறுதி இரு மாதங்களிலும் அவதானிக்கப்பட்ட பருவகால உயர்வுக்கு பின்னர் தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 திசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சனவரி மாதத்தில் ஒரு குறைவான வீதத்தில் வளர்ச்சியடைந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. மேலும், 2017 திசெம்பருடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை துணைச்சுட்டெண்ணும் மாதகாலப்பகுதியில் மெதுவடைந்திருந்த வேளையில், கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு குறைவான வீதத்தில் நீட்சியடைந்தது.
-
Regulatory Action on a Primary Dealer – Pan Asia Banking Corporation PLC
இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைத் தொடரும் நோக்குடன், பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியலகள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் செய்யப்ட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக செயற்பட்டு 2018 பெப்புருவரி 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியால் மேற்கொள்ளப்படும் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தான இடைநிறுத்தலினை 2018 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.
-
Monetary Policy Review - No. 1 of 2018
உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப் பொருளாதாரச் சூழலின் அண்மைக் கால அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு நாணயச் சபை 2018 பெப்புருவரி 14இல் நடத்தப்பட்ட அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பொருத்தமானதெனவும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதெனவும் தீர்மானித்தது.
நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பேணுதல் மற்றும் அதன் மூலம் நிலைத்துநிற்கும் வளர்ச்சிப் பாதையொன்றிற்கு வசதிப்படுத்துதல் போன்ற குறிக்கோளுடன் இசைந்துசெல்லும் வகையில் நாணயச் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு பக்கபலமாக அமைந்த நியாயங்கள் கீழே தரப்படுகின்றன.