2023 மாச்சு 20 அன்று, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தும் வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் ஐ.அ.டொலர் 7 பில்லியன் நிதியிடலுக்கு வழியமைத்து பன்னாட்டு நாணய நிதியச் சபை இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒப்புதலளித்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டமானது கொள்கை நடைமுறைப்படுத்தல் நியதிகளில் தெளிவான வழிகாட்டலொன்றை வழங்குவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சாத்தியமான அதன் வளர்ச்சியினை மீட்டெடுப்பதற்கும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் தன்மைகளை நிவர்த்திசெய்வதையும் இயலச்செய்கின்றது.
-
Statement by Governor and Secretary to the Treasury after the virtual Investor Presentation held on 30.03.2023
-
Risks of using and investing in Cryptocurrency
“கிறிப்டோ” என பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடுசெய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது. கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகாரசபையினாலன்றி தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். ‘கிறிப்டோ நாணயம்’ என்ற சொற்பதமானது மறைகுறியாக்கம் மற்றும் பகிரப்பட்ட பேரட்டு தொழில்நுட்பம் அல்லது அதையொத்த தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற டிஜிட்டல் பெறுமதியின் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
-
IMF Executive Board Approves US$3 Billion Under the Extended Fund Facility (EFF) Arrangement for Sri Lanka
இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மறுசீரமைப்புக்களுக்கும் ஆதரவளிக்கும் பொருட்டு சி.எ.உ 2.286 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியன்) கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட ஏற்பாடொன்றிற்கு பன்னாட்டு நாணய நிதிய சபை ஒப்புதலளித்தது.
பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினையும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினையும் மீட்டெடுத்தல், நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்கான கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தல் என்பன விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் நோக்கங்களாகும். அனைத்து செயற்றிட்ட வழிமுறைகளும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆளகையினை மேம்படுத்துகின்றதன் அவசியத்தினைக் கவனத்திற்கொண்டுள்ளன.
-
Sri Lanka Purchasing Managers’ Index - February 2023
தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், பெப்புருவரியில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 42.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை எடுத்துக்காட்டியது. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றுகையினால் இப்பின்னடைவு தூண்டப்பட்டிருந்தது
-
Public Lecture on the “Central Bank of Sri Lanka Bill” by Dr. P Nandalal Weerasinghe, Governor of Central Bank of Sri Lanka (Sinhala Medium)
சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை மத்திய வங்கியினை ஆளுகின்ற சட்டவாக்கமாக வரவுள்ள இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நோக்கில், முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க, பகிரங்க விரிவுரையொன்றினை சிங்கள மொழிமூலம் வழங்கவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து வளவாளர்களைக்கொண்ட குழாமொன்றுடனான கலந்தாராய்வொன்றும் இடம்பெறும். இதில் எவையேனும் கரிசனைகள் ஏதுமிருப்பின் தெரிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் அவையோருக்கு வழங்கப்படும்.
மத்திய வங்கியின் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு 2023 மாச்சு 16 அன்று ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, இல.58 இல் அமைந்துள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் கேட்போர் கூடத்தில் பி.ப.2.30 தொடக்கம் பி.ப.4.30 வரை இடம்பெறும்.
-
Sale of the Commemorative Coin issued to Mark the 75th Independence Celebration of Sri Lanka
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணயக் குற்றிகள், 2023.03.09ஆம் திகதி தொடக்கம் முதலில் வருவோருக்கு முதலில் வழங்குதல் அடிப்படையில் தனிப்பட்ட அடையாள விபரங்களைப் பெற்று, குற்றியொன்றுக்கு ரூ.6,000 விலையில் விற்பனைக்காகக் கிடைக்கப்பெறும் என்பதுடன் பின்வரும் மத்திய வங்கி விற்பனை நிலையங்களில் ஆளொருவருக்கு ஒரு குற்றி வீதம் என விற்பனை மட்டுப்படுத்தப்படும்.
-
Concessionary Measures to Micro, Small and Medium Enterprises (MSMEs) and Individuals affected by the Present Macroeconomic Conditions
கொவிட்-19 நோய்ப்பரவல் அத்துடன் அதனைத்தொடர்ந்து வந்த பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகள் மூலம் பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு உதவும் முகமாக இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்க;டாக பலவகையான கடனை காலந்தாழ்த்தி செலுத்தும் வசதிகளையும் சலுகைத் திட்டங்களையும் இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி வீதங்கள், தொழில்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல்ஃ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இத்திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.
-
Former Governor of the Central Bank, Mr. H.B. Dissanayake, Passes Away
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. எச். பீ. திசநாயக்கா காலமாகிவிட்டார் என்பதனை நாம் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
அவர் 2023 மாச்சு 05ஆம் திகதி அவரது 85 ஆவது வயதில் மறைந்தார்.
திரு. திசநாயக்கா இலங்கை மத்திய வங்கியின் 9 ஆவது ஆளுநராக 1992 யூலை 01 இலிருந்து 1995 நவெம்பர் 15ஆம் திகதி வரை தொழிற்பட்டார். ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் அவர், சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை மத்திய வங்கியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் 1995 இலிருந்து 1998 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
-
The Central Bank of Sri Lanka raises the Policy Interest Rates
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2023 மாச்சு 03ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 2023 மாச்சு 03ஆம் நாள் வியாபார முடிவிலிருந்து முறையே 15.50 சதவீதத்திற்கும் 16.50 சதவீதத்திற்கும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
-
CCPI based headline inflation eased in February 2023
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 சனவரியின் 51.7 சதவீதத்திலிருந்து 2023 பெப்புருவரியில் 50.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023 சனவரியில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக பரந்தளவில் காணப்படுகின்றது.