• The Central Bank publishes 'Recent Economic Developments: Highlights of 2022 and Prospects for 2023'

    இலங்கை மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2022இன் முக்கிய பண்புகளும் 2023இற்கான வாய்ப்புக்களும்” இனை இன்று வெளியிட்டுள்ளது. இவ்வெளியீட்டினை மத்திய வங்கியின் இணையத்தளத்தினூடாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

  • External Sector Performance - September 2022

    2022 செத்தெம்பரில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள்  தொடர்ந்தும் வலுவடைந்த அதேவேளையில், உணவல்லா நுகர்வுப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினைப் பிரதிபலிக்கும் வகையில் இறக்குமதிச் செலவினம் தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 செத்தெம்பரில் (ஆண்டிற்காண்டு) குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 செத்தெம்பரில் சிறிதளவில் அதிகரித்துக் காணப்பட்டன (ஆண்டிற்காண்டு), சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2021 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் 2022இன் அதே காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு 2022 செத்தெம்பர் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது.

  • CCPI based headline inflation recorded 66.0% in October 2022, reversing its continued increasing trend observed since October 2021

    2021 ஒத்தோபர் தொடக்கம் அதிகரித்த போக்கில் சென்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 செத்தெம்பரின் 69.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 66.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.  அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 செத்தெம்பரின் 94.9 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 85.6 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 57.6 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 56.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

  • Release of ‘Financial Literacy Survey Sri Lanka – 2021’ Publication

    ‘Financial Literacy Survey Sri Lanka - 2021’, a publication of the Central Bank of Sri Lanka, is now available for public access.

    The Regional Development Department of the Central Bank of Sri Lanka, with the assistance of the International Finance Corporation (IFC) – under the IFC-DFAT Women in Work program – conducted the first ever countrywide Financial Literacy Survey in Sri Lanka, as part of the implementation of the National Financial Inclusion Strategy of Sri Lanka. The key objective of the survey was to assess the level of financial literacy across the population with a view to formulating appropriate policy measures.

    The survey focused on the elements of knowledge, attitudes and behavior within the concept of financial literacy and this publication consists of the key survey findings.

  • NCPI based headline inflation recorded at 73.7% on year-on-year basis in September 2022

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 70.2 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 73.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு  பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 84.6 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 85.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 57.1 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 62.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - September 2022

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 செத்தெம்பரில் பணிகள் நடவடிக்கைகளுக்காக சிறிதளவு விரிவடைதலையும் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக சுருக்கத்தினையும் காண்பிக்கின்றன.

    தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 செத்தெம்பரில் வீழ்ச்சியடைந்து மாதத்திற்கு மாதம் அடிப்படையில்; தயாரிப்பு நடவடிக்கைகளில் பின்னடைவொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது தொழில்நிலை மற்றும் வழங்குநர்களின் விநியோக நேரம் தவிர அனைத்து துணைச் சுட்டெண்களிலும் குறைவடைதல்களினால் தூண்டப்பட்டு  முன்னைய மாதத்திலிருந்து 7.0 சுட்டெண் புள்ளிக்களைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 செத்தெம்பரில் 42.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. 

    பணிகள் கொ.மு.சுட்டெண், 2022 செத்தெம்பரில் 51.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டு பணிகள் துறையில் சிறிதளவான விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. 

  • Appointment of a New Deputy Governor

    கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் நாணயச் சபையானது உதவி ஆளுநரும் நாணயச்  சபைக்கான செயலாளருமான திருமதி. கே. எம். ஏ. என். டவுளுகல அவர்களை 2022 ஒத்தோபர் 07ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவியுயர்த்தியுள்ளது.

    திருமதி டவுளுகல, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, நிதி, பன்னாட்டுத் தொழிற்பாடுகள், இடர்நேர்வு முகாமைத்துவம், பிரதேச அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி அத்துடன் அபிவிருத்தி ஆகிய துறைகளில் வேறுபட்ட பதவிகளில் இலங்கை மத்திய வங்கியில் 31 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார்.

  • External Sector Performance – August 2022

    இறக்குமதிச் செலவினமானது 2022 யூலையுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றை பதிவுசெய்த போதிலும் ஆண்டிற்காண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக 2022 ஓகத்தில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேவைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு 2022 ஓகத்தில் அரசாங்கம் அவசரமற்ற இறக்குமதிகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை இறுக்கமாக்கிய போதிலும் பின்னர் 2022 செத்தெம்பர் மாத காலப்பகுதியில் பகுதியளவில் தளர்த்தப்பட்டன. அதேவேளை, ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 ஓகத்தில் அதிகரித்து 2022 ஏப்பிறல் தொடக்கம் அவதானிக்கப்பட்ட அதன் வரவேற்கத்தக்க வளர்ச்சிப் போக்கினைத் தொடர்ந்தன. இதன் விளைவாக, வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.

  • The Central Bank of Sri Lanka maintains policy interest rates at their current levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தினை மேற்கொள்கையில் சபையானது அண்மைய பேரண்டப்பொருளாதார நிலைமைகள், எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையில் கொண்டது. தற்போது நிலவுகின்ற இறுக்கமான நாணய நிலைமைகள், குறைவடைந்து செல்கின்ற பணவீக்கத்தின் வேகம் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகள் இரண்டினாலும் ஆதரவளிக்கப்பட்டு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க வீழ்ச்சிப் பாதை என்பவற்றினை சபை குறித்துக்காட்டியது. எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்டும் பணவீக்க வீழ்ச்சிப் பாதையினையடைவதற்கு நாணய நிலைமைகள் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. இறுக்கமான இறை வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை வழிமுறைகளின் தாக்கங்களை முழுமையடையச்செய்து கூட்டுக்கேள்வி அழுத்தங்களின் ஏதேனும் கட்டியெழுப்புதலினை தணித்து அதன்மூலம் பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்தி முதன்மைப் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவருவதில் துணைபுரியும். 

  • CCPI based headline inflation recorded at 69.8% on year-on-year basis in September 2022

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 64.3 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்;கு ஆண்டு பணவீக்கத்தில் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஓகத்தின் 93.7 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 94.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 50.2 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 57.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

Pages