• External Sector Performance - April 2024

    2024 ஏப்பிறலில் ஏற்றுமதிகள் இறக்குமதிகளிலும் பார்க்க அதிகரித்து (ஆண்டிற்காண்டு) வர்த்தகப் பற்றாக்குறையினைக் குறைவடையச் செய்தன. இருப்பினும், 2024 சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதிக்கான ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது விரிவடைந்து காணப்பட்டது.

    பருவகாலப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் 2024 ஏப்பிறலில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மெதுவடைந்து காணப்பட்டபோதிலும் சுற்றுலாத் துறையின் உத்வேகம் தொடர்ந்து காணப்படுகின்றது.

    ஏனைய பணிகள் துறைகளிற்கான உட்பாய்ச்சல்களும் 2024இன் முதல் நான்கு மாதங்களில் தொடர்ந்தும் வலுவடைந்து காணப்பட்டன.

  • The Central Bank of Sri Lanka Maintains Policy Interest Rates at their Current Levels

    இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2024 மே 27ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சாத்தியமான இடர்நேர்வுகள் என்பவற்றினைக் கவனமாக மதிப்பீடு செய்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாடானது தற்போதைய கொள்கை வட்டி வீத மட்டத்துடன் தொடர்ந்தும் ஒத்திசைந்து செல்வதுடன் பணவீக்க எதிர்பார்க்கைகள் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு நாணய நிலைமைகளின் தளர்வு மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மீட்சி என்பவற்றிற்கு இன்றியமையாததாக விளங்குகின்ற கொள்கை வட்டி வீதங்கள் மற்றும் ஏனைய அடிப்படை வட்டி வீதங்கள் என்பவற்றுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களில் மேலுமொரு குறைப்பிற்கான தேவையை சபை அவதானத்திலெடுத்தது.

  • Central Bank Launches Financial Literacy Roadmap of Sri Lanka 2024-2028

    இன்று அதாவது, 2024 மே 21 அன்று இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் நிதியியல் அறிவு வழிகாட்டலை அங்குரார்ப்பணம்செய்து, இலங்கையின் நிதியியல் இயலளவுகளை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய படிமுறையினை அடையாளப்படுத்தியது. இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் அத்திவாரமான இவ்வழிகாட்டலானது இலங்கையர்களின் நிதியியல் நடத்தையினை மேம்படுத்தி, அவர்களின் நிதிசார் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலிமைப்படுத்தும் பொதுவானதோர் குறிக்கோளை நோக்கி நிதியியல் அறிவு முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் அணிசேர்த்து அவர்களுக்குச் சான்று அடிப்படையிலான வழிகாட்டலை வழங்குகின்றது.

  • Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - April 2024

    கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 ஏப்பிறலில் தயாாிப்பு நடவடிக்கைகளில் சுருக்கத்தினையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டுகின்றன

    தயாரித்தலுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாாிப்பு), 2024 ஏப்பிறலில் 42.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பருவகாலப் போக்கின் பின்னர் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு ஆகிய துணைச் சுட்டெண்கள் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்து, சுட்டெண்ணில் ஒட்டுமொத்த வீழ்ச்சியை விளைவித்தன.   

    பணிகளுக்கான இலங்கைக் கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 56.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 ஏப்பிறலில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

  • Public Consultation on Amendments to the Finance Leasing Act, No.56 of 2000 (as amended) (FLA)

    நிதிக் குத்தகைக்குவிடுகின்ற வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை வலுப்படுத்துகின்ற தேவையினை அங்கீகரிக்கின்ற விதத்திலும் தொழில்துறை அபிவிருத்திகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தினை இற்றைப்படுத்துவதற்காகவும் மத்திய வங்கி குத்தகைக்குவிடல் சட்டத்தினை திருத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருக்கிறது.

    ஆர்வலர்களின் பரந்தளவிலான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை மத்திய வங்கி வரைவுத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமது அவதானிப்புக்களை/ யோசனைகளைஃ கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கிறது. பொதுமக்கள் வரைவுத் திருத்தங்களை இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலுள்ள பின்வரும் வெப் இணைப்பினூடாக அணுகமுடியும்.

  • External Sector Performance - March 2024

    ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினால் ஆதரவளிக்கப்பட்டு வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 மாச்சில் சுருக்கமடைந்ததுடன் (ஆண்டிற்காண்டு அடிப்படையில்) இது 2022 ஓகத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட உயர்ந்தளவிலான வருவாய்களாகக் காணப்பட்டது.

    பணிகள் துறையும் சுற்றுலாத் துறையினால் முக்கியமாகப் பங்களிக்கப்பட்டு 2024 மாச்சில் குறிப்பிடத்தக்க தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கடல் போக்குவரத்து (சரக்கு) பணிகள் நியதிகளிலும் கணிசமானளவிலான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டன.

    பருவகாலப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள்; 2024 மாச்சில் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டன.

  • CCPI based headline inflation showed some uptick in April 2024

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 மாச்சின் 0.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஏப்பிறலில் 1.5 சதவீதமாகப் பதிவாகி சிறு அதிகரிப்பொன்றினைக் காண்பித்தது.

  • SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – March 2024

    கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 55.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு மாச்சில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் இச்சுட்டெண் காணப்படுகின்ற தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இது விளங்கி, கட்டடவாக்க நடவடிக்கைகளில் நிலையான மேம்படுதலைக் குறித்துக்காட்டுகின்றது.

  • The Central Bank of Sri Lanka hosted the FSB RCG Asia Meeting in Colombo on 29 April 2024

    ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு 2023.04.29 அன்று கொழும்பில் கூடியது. உன்னிப்பான கண்காணிப்பைத் தேவைப்படுத்திய அண்மைக்கால நிதியியல் அபிவிருத்திகள் மற்றும் பாதிக்கப்படும்தன்மைகளை இக்கலந்துரையாடல்கள் மையப்படுத்தியிருந்தன. அதற்கமைய, பிராந்தியம் முழுவதும் கிறிப்டோ-சொத்துச் செயற்பாடுகளுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் நடைமுறைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அண்மைக்கால முன்னேற்றங்கள், நிதியியல் துறையில் அதன் வளர்ச்சியடைகின்ற உபயோகம் அத்துடன் நிதியியல் உறுதிப்பாட்டிற்கான அதன் உள்ளார்த்தங்கள் என்பவற்றைக் குழு கலந்துரையாடியது.

  • The Central Bank of Sri Lanka releases its inaugural Annual Economic Review and Financial Statements and Operations of the Central Bank for the Year 2023

    2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 80இன் கீழான 2023ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 99இன் கீழான 2023ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் எனும் தொடக்க வெளியீடுகள் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். பி நந்தலால் வீரசிங்க அவர்களினால் இன்று (2024 ஏப்பிறல் 25) கையளிக்கப்பட்டன.

Pages