வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினத்தின் முக்கிய காரணமாக 2024 சனவரியில் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது.
பணிகள் வர்த்தகத்தினைப் பொறுத்தவரையில், கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம்/ வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளலுடன் தொடர்புடைய பணிகள் என்பன 2023 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2024 சனவரியில் குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, விமானப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து, முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை வழங்குகின்ற பணிகள் என்பவற்றில் வெளிப்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டன.
தொழிலாளர் பணவனுப்பல்கள் முன்னைய ஆண்டின் சனவரி மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024இன் தொடர்புடைய காலப்பகுதியில் மேம்பாடொன்றினைப் பதிவுசெய்தன.