2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லாத் தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.
அதற்கமைய, நாட்டில் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு நிதியியல் நிறுவனங்கள் மீது 2021 சனவரி 01 தொடக்கம் மாச்சு 31 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.4.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது.