பொதுப் படுகடன் முகாமைத்துவம்

நாணயச் சட்ட விதியின் 113 ஆம் பிரிவின் படி, பொதுப் படுகடன் முகாமைத்துவத் தொழிற்பாடு இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களம் உள்நாட்டுப் படுகடனைக் கையாள்வதில் அரசாங்கத்தின் முகவராகச் செயல்படுகின்றது. இதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களம் அரசாங்கத்தின் சார்பில் படுகடன் சாதனங்களை வழங்குவதுடன் அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் படுகடன்களை தீர்ப்பனவு செய்வதுடன் தொடர்பான அனைத்து விடயங்களையும் கையாளுகின்றது. வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெறுவது தொடர்பான விடயங்களை நிதியமைச்சு கையாள்கின்றது.

படுகடன் முகாமைத்துவத்தின் குறிக்கோள் யாதெனில் முன்மதியுடைய இடர்நேர்வு விடயங்களுடன் ஒத்துச் செல்லும் விதத்தில் சாத்தியமானளவிற்கு குறைந்த செலவில் அரசாங்கத்தின் நிதியிடல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதனை உறுதிப்படுத்துவதும் அரச பிணையங்கள் சந்தையினை அபிவிருத்தி செய்து பலப்படுத்துவதுமாக உள்ள வேளையில் வினைத்திறனை உயர்த்தி உறுதிப்பாட்டினைப் பேணுவதேயாகும். அரச படுகடன் முகாமைத்துவத்தில் பின்பற்றப்படவிருக்கும் உபாயக் குறிக்கோள் இலங்கையிலுள்ள எந்தவொரு சட்டத்தினாலும் தெளிவுபடுத்தப்படவில்லை எனினும், படுகடன் முகாமைத்துவம் பின்வரும் விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மறைமுகமான விதத்தில் விளங்கிக் கொள்ளப்படுகின்றது:

1. நீண்டகால நோக்கில் பொதுப்படுகடனின் நேரடி மற்றும் மறைமுக செலவினைக் குறைத்தல்

2. படுகடன் பணிச் செலவின் தளம்பல்களைத் தவிர்த்தல் மற்றும் சமநிலையான பங்கீடுகளை உத்தரவாதப்படுத்தல்

3. திரும்ப பெறுகைகளின் மீதான மிகையான குவிவுகளை தடுத்தல்

4. எந்தவொரு வகை மீண்டும் மீண்டும் ஏற்படும் இடர்நேர்வு/ மீள் நிதியிடல் இடர்நேர்வுகளினையும் குறைத்தல்

5. அரச பிணையங்கள் சந்தையின் வினைத்திறன்மிக்க தொழிற்பாட்டினை ஊக்குவித்தல்

6. அரச படுகடன்களை சரியான நேரத்தில் 100 சதவீதம் துல்லியத்துடன் தீர்ப்பனவு செய்தல்

பொதுப் படுகடன் முகாமைத்துவத்தின் உபாயத்தின் பொது நோக்கு

உள்நாட்டு படுகடன் முகாமைத்துவத்தின் தந்திரோபாயங்களினை உள்நாட்டு படுகடன் முகாமைத்துவக் குழு தீர்மானிக்கின்றது. இக்குழு நிதியமைச்சினதும் இலங்கை மத்திய வங்கியினதும் மூத்த அலுவலர்களை உள்ளடக்கியிருக்கிறது. மாதாந்த அடிப்படையில் இக்குழு கூடுகின்றதுடன் சந்தை நிலவரங்கள், சந்தை தேவை, நாணய அபிவிருத்திகள், பணவீக்கம், அரச காசுப்பாய்ச்சல் தேவை, படுகடன் பிணைகளின் முதிர்ச்சி மற்றும் அவற்றில் உள்ள இடர்நேர்வு போன்றவற்றினை கவனத்திலெடுத்து சந்தை அடிப்படையிலான தந்திரோபாயத்தினைக் கடைப்பிடிக்கின்றது. இந்த உபாயங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்த மற்றும் மாதாந்த கடன் திட்டங்கள் பொதுப்படுகடன் திணைக்களத்தின் முன்னரங்க அலுவலர்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மூலவளங்களைத் திரட்டுவதற்கு கிடைக்கத்தக்கதாகவுள்ள முக்கிய கருவிகளாக திறைசேரி உண்டியல்கள் (91, 182 மற்றும் 364 நாள் முதிர்ச்சி), திறைசேரி முறிகள் (2 - 20 ஆண்டு முதிர்ச்சி), ரூபாக் கடன்கள் (3 - 30 ஆண்டு முதிர்ச்சி) என்பன காணப்படுகின்றன. மிக அண்மையில் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட சுட்டெண் முறிகளும் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. மூலவளங்களைத் திரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட நிறுவன ரீதியான பொறிமுறையாக முதனிலை வணிகர் வலையமைப்பு காணப்பட்டதுடன் ஏலங்கள் இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்டன.

உள்நாட்டுப் படுகடன் முகாமைத்;துவத்தின் உபாயம் முக்கியமாக பின்வருவனவற்றில் கவனம் செலுத்துகின்றது.

() ஒரு பரந்தளவிலான நிதியிடலையும் முதலீட்டாளரின் தளத்தினையும் அபிவிருத்தி செய்வதன் மூலம் மிகக் குறைந்த செலவில் அரசாங்கத்தின் பண பாய்ச்சல் தேவையினை எதிர் கொள்வதற்கு போதியளவு மூலவளங்களினைத் திரட்டுதல்

() மத்திய வைப்பக முறைமை என அறியப்படும் அரச பிணையங்களுக்காக தலைப்பு பதிவேடு ஒன்றினைப் பேணுவதுடன் அனைத்து அரச பிணையங்களினதும் கொடுக்கல்வாங்கல்களும் 100 சதவீத துல்லியத்துடன் மத்திய வைப்பக முறைமையில் பதிவு செய்யப்படுவதனை உறுதிப்படுத்தல்.

() உள்நாட்டு வெளிநாட்டுப்படுகடன் கடப்பாடுகளை உரிய நேரத்தில் தீர்ப்பனவு செய்தல்.

() படுகடன் சொத்துப்பட்டியலின் இடர்நேர்வினை ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு மட்டத்தில் பேணும் வேளையில் குறுங்கால, நீண்ட கால படுகடன்களுக்கிடையே சமநிலையினை உறுதிப்படுத்தல்.

() நீண்டகால விளைவு வளைகோட்டினையும் அடிப்படை அளவுக்குறியீடாக விளங்கும் பிணையங்;களையும் விருத்தி செய்வதனூடாக, போதியளவுபிணைகளைச் சந்தைக்கு வழங்குதல் மற்றும் நிறுவன ரீதியானதும் சட்டரீதியான கட்டமைப்புக்களினை பலப்படுத்தல் போன்றவற்றின் மூலம் நல்ல முறையில் தொழிற்படும் படுகடன் பிணைகளின் சந்தையினை ஊக்குவித்தல்.

() தற்போது நடைமுறையில் உள்ள பேரண்ட பொருளாதாரம் மற்றும் சந்தை நிலைமைகளினை கணக்கிலெடுத்து பொருத்தமான படுகடன் முகாமைத்துவ தந்திரோபாயம் பற்றி நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்குதல்.

() பொதுப் படுகடன் முகாமைத்துவம் தொடர்பாக தொழில் நுட்பரீதியான உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்வதோடு அவற்றினைப் பேணுவதும் அதன் தரத்தினை உயர்த்துவதும்.

தீர்ப்பனவுக் கொடுப்பனவுக் கடப்பாடுகளை நேரகாலத்துக்கு மேற்கொள்தற்கும் மேற்பார்வை செய்வதற்கும் மிக காத்திரமான பொறிமுறையொன்று உள்ளது. வருடாந்த மாதாந்த படுகடன் எதிர்வுகூறல்களை பின்னரங்க அலுவலர்கள் கண்கணிப்பதுடன் கொடுப்பனவு கடப்பாடுகளை உள்ளகக் குழு பரிசீலித்து அங்கீகரிக்கின்றது. 2004 இல் இருந்து தீர்ப்பனவு மற்றும் உள்நாட்டு படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகள் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறை மற்றும் அதேநேர மொத்த தீர்ப்பனவு முறை என்பன மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. மத்திய வைப்பக முறையென பெயரிடப்படுள்ள இலத்திரனியல் உரிமையை உறுதி செய்யும் பதிவேட்டின் பதி;வுகளை பேணுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறை அதேநேர மொத்த தீர்ப்பனவு முறை எனபன மூலம் நிதிகள் தீர்ப்பனவு செய்யப்படுவதினால் மொத்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் மற்றும் சந்தைத் திறன் என்பனவற்றின் அளவு விரிவடைவதோடு நீண்ட காலத்தில், கடன் பெறும் செலவும் குறைவடையும்.

அதற்கமைய, எதிா்பாா்க்கப்பட்ட நடுத்தரகால படுகடன் முகாமைத்துவ உபாயம் 2019 -2023 இனை இங்கு பதிவிறக்கம் செய்யலாம்.

முதனிலை வணிகர் முறை

அராசாங்க பிணைச் சந்தையினை விரிவுபடுத்தி வளங்களிணை குறைந்த செலவில் திரட்டுதல் மற்றும் அரசாங்க பிணைச் சந்தையினை பரவலாக்கி விரிவுபடுத்தும் குறிக்கோளுடன் ஓர் பிரத்தியேக முதன்நிலை வணிகர் முறை 2000 இல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 15 முதனிலை வணிகர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சந்தை இடர்நேர்வுகளுக்கு உட்படக் கூடிய தன்மைகளைக் குறைப்பதன் மூலம் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினை அதிகரிப்பதற்காக, முதனிலை வணிகாகள்; 2009 திசெம்பர் 02ஆம் நாளிலிருந்து, குறிப்பிட்ட வரையறைகளுக்குட்பட்டு அவற்றின் நடவடிக்கைகளைப் பன்முகப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கி தேவையான பணிப்பினை வெளியிடுவதோடு கோட்பாடுகள் வழிகாட்டல்களை உருவாக்கியுள்ளதுடன் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களமானது தலத்திலும் தலத்திற்கு வெளியேயானதுமான முதனிலை வணிகர்களின்; மேற்பார்வையினை நடாத்தி முதனிலை வணிகர்; முறையினைப் பலப்படுத்தி உறுதியினைப் பேணுகின்றது.

படுகடன் சொத்துப் பட்டியல் தகவலினைப் பேணுதல்

பகிர்ந்தளிப்புக்கள் மற்றும் படுகடன் பணிக்கடப்பாடுகள் என்பன உட்பட எல்லா வெளிநாட்டு படுகடன் பதிவுகளும் "படுகடன் பதிவிடல் மற்றும் முகாமைத்துவமுறைமை" என அறியப்படும் பொதுநலவாய செயலகத்தில் பேணப்படுகின்றதுடன் உள்நாட்டு படுகடன் தொடர்பான தகவல் உள்ளக ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட கணனிமயப்படுத்தப்பட்ட படுகடன் பதிவுமுறையொன்றில் பேணப்படுகின்றன.

படுகடன் தொடர்பான தகவல் பொது மக்களுக்கும் சந்தையில் பங்கு பற்றுவோருக்கும் வாராந்த, மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் பரப்பப்படுகின்றது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் போன்றவற்றிலான வெளிநாட்டு முதலீடு

முதலீட்டாளர் தளத்தினை விரிவாக்கும் பொருட்டு, திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் சந்தை, வெளிநின்ற திறைசேரி உண்டியல் இருப்பின் 10.0 சதவீதம் மற்றும் வெளிநின்ற திறைசேரி முறிகள் இருப்பின் 10.0 சதவீதம் என்ற தனித்தனியான வரையறைக்குட்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரியும் / வதியும் இலங்கையர்களுக்காக திறந்து விடப்பட்டது.