புதிய அனைத்தையுமுள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம் (NCRCS)

 

பொதுவான தகவல்கள்

இத் திட்டமானது இலங்கையின் அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட ஒரு வட்டி மானியம் மற்றும் கொடுகடன் உத்தரவாதமளிப்புத் திட்டமாகும்.

திட்டத்தினை நடைமுறைப்படுத்தல்

கீழே குறிப்பிடப்பட்ட பங்குபற்றும் நிதியியல் நிறுவனங்கள் தகுதியுடைய பயன்பெறுநர்களுக்கு தகுதியுடையதுணை கொடுகடன்களினை வழங்குவதுடன் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நேர அட்டவணைப்படி இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வட்டி மானியத்தினை பெற்றுக்கொள்ளும். இத்திட்டமானது தீவு முழுவதையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தகுதியுடைய கடன்பெறுநர்கள்

பண்ணையாளர்கள் (பயிர்ச்செய்கைக்கான நிலம் கொண்டவர்கள்)

தகுதியுடைய பயிர்கள்

(அ) 34 பயிர்கள்:

நெல், மிளகாய், வெங்காயம், கௌபி, பயறு, உளுந்து, சோயா அவரை, குரக்கன், சோளம், நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, உருளைக் கிழங்கு, வற்றாளைக் கிழங்கு, மரவள்ளி, பால் கிழங்கு, வெண்டைக்காய், பீட்றூட், போஞ்சிக்காய், கோவா, கரட், கறிமிளகாய், தக்காளி, லீக்ஸ், முள்ளங்கி, நோக்குல், பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், இஞ்சி, கரும்பு மற்றும் மஞ்சள்.

(ஆ) வீட்டுத் தோட்டங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள்

ஆகக் கூடிய கடன் தொகை

(அ) 34 பயிர்களுக்கு*: ரூ.756,000/-
(ஆ) வீட்டுத் தோட்டம்: ரூ.100,000/-
(இ)  நாற்றுப்பண்ணைகள்: ரூ. 500,000/-

* பயிருக்கு பயிர் ஆகக்கூடிய கடன்தொகை மாறுபடும்

வட்டி வீதம்; மற்றும் மீளச்செலுத்தும் காலம்

- ஆண்டிற்கு 8 சதவீதம் (8% ஆ.ச.)
- வீட்டுத் தோட்டம் உள்ளடங்கலாக 33 பயிர்களுக்கு: 270 நாட்கள்
குறிப்பு:- கரும்பிற்கு 365 நாட்கள்

பங்குபற்றும் நிதியியல் நிறுவனங்கள்

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நஷனல் பாங்க் பிஎல்சி, கொமர்சியல் பாங்க் பிஎல்சி, யூனியன் பாங்க் பிஎல்சி, செலான் வங்கி பிஎல்சி, சம்பத் பாங்க் பிஎல்சி, சணச டிவெலெப்மன்ட் பாங்க் லிமிடெட், நஷனல் டிவெலெப்மன்ட் பாங்க் பிஎல்சி, டிஎவ்சிசி பாங்க் பிஎல்சி, எச்டிஎவ்சி பாங்க் பிஎல்சி, காகிள்ஸ் பாங்க் லிமிடெட்

மேலதிக தகவல்களுக்கும் விளக்கங்களுக்கும்

இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் (0112477477/011 2477484/0112477015/0112477286), இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்கள் மற்றும் பங்குபற்றும் நிதியியல் நிறுவனங்கள்.