டி. டபிள்யு. ராஜபத்திரன (1959 – 1967)

D W Rajapathirana

திரு. டி. டபிள்யு. ராஜபத்திரன நான்காவது ஆளுநராக 1959 யூலையில் பதவியேற்றதுடன் 1967 ஓகத்தில் பதவி விலகிக் கொண்டார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்விகற்ற திரு. ராஜபத்திரன 1923இல் நுழைவுப் புலமைப்பரிசிலொன்றினை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் பல்கலைக்கழக கல்வியைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு லண்டன் ஸ்கூல் ஒவ் எக்னமிக்ஸ்ஸில் நுழைந்ததும் காசல் புலமைப்பரிசிலை வெற்றி கொண்டார். இலண்டன் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட இப்புலமைப்பரிசில் ஓராண்டு அமெரிக்காவில் கல்வி கற்பதற்கானதாகும். அங்கு அவர் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஒவ் பிசினஸ்ஸில் இணைந்து கொண்டார்.

1927இல் அவர் இலங்கைக்கு திரும்பியதும் அவரின் முதல் பணியாக இலங்கைப் புகைவண்டிப் பகுதியில் உதவிக் கணக்காளராக இணைந்து கொண்டார். 1932இல் வருமான வரித் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர் அதன் பின்னர் மேலதிகச் செலாவணிக் கட்டுப்பாட்டாளராகவும் 1947இல் வருமான வரி ஆணையாளராகவும் பதவி வகித்தார். இலங்கையின் கணக்காளர் சபையின் உறுப்பினராக விளங்கிய இவர் 1951இல் மத்திய வங்கியின் மதியுரையாளராக நாணயச் சபையினால் நியமிக்கப்பட்டார். ப.நா. நிதியத்தில் இலங்கையையும் மற்றைய பல நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

திரு. ரரஜபத்திரன 1953இல் மத்திய வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டதுடன் 1959இல் ஆளுநராகி எட்டு ஆண்டுகள் பதவியிலிருந்தார்.