டபிள்யு. தென்னக்கோன் (1967 – 1971)

W Tennekoon

திரு. வில்லியம் தென்னக்கோன் ஐந்தாவது ஆளுநரராக 1967 ஓகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் 1971 மேயில் பதவியிலிருந்தும் விலகிக் கொண்டார்.

திரு. டபிள்யு. தென்னக்கோன் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் றினிட்டி கல்லூரியிலும் கல்வி பயின்றார். பொருளியலில் அவரின் பல்கலைக்கழகக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பூர்த்தி செய்து கொண்டதுடன் 1938இல் அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் திணைக்களத்தில் வருகைதரு விரிவுரையாளராக அவரின் பணியினை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் 1939இல் வங்கித்தொழில் துறையில் பணியாற்றத் தொடங்கிய திரு. தென்னக்கோன் இலங்கை வங்கியில் கணக்காளராகவும் அதனைத் தொடர்ந்து அதன் தலைமை அலுவலகத்தில் முகாமையாளராகவும் பதவி வகித்தார். மத்திய வங்கியாளர் என்ற பணி 1950இல் ஆரம்பமாயிற்று. அப்பொழுது அவர் இலங்கை மத்திய வங்கியில் முதலாவது முதன்மைக் கணக்காளராக நியமிக்கப்பட்டதுடன் வங்கித்தொழில் மற்றும் நாணயத் திணைக்களத்தின் தலைவராகவும் தொழிற்பட்டார். அதன் பின்னர் அவர் வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவியேற்றார். மத்திய வங்கியில் அவர் பணியாற்றிய காலத்தில் ப.நா. நிதியத்திற்கும் (1953 மற்றும் 1962) உலக வங்கிக்கும் (1954) விடுவிக்கப்பட்டார். மத்திய வங்கித்தொழிலில் வெற்றிகரமாகப் பயணித்த இவர் 1957இல் துணை ஆளுநராகவும் 1964இல் மூத்த துணை ஆளுநராகவும் இறுதியில் 1967இல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

மத்திய வங்கித் தொழிலின் பின்னர் திரு. தென்னக்கோன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பதவி வகித்தார்.  1973இல் அவர் அட்டன் நஷனல் வங்கியின் தலைவர் மற்றும் பணிப்பாளர்களுக்கான மதியுரையாளராகத் தொழிற்பட்டதுடன் 1974இலிருந்து அவர் இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார். திரு. தென்னக்கோன் அட்டன் நஷனல் வங்கி உட்பட பல தனியார் துறைக் கம்பனிகளுக்கும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.