எச். பீ. திசாநாயக (1992 – 1995)

H B Disanayaka

திரு. ஹீன் பண்டா திசநாயக்கா மத்திய வங்கியின் ஒன்பதாவது ஆளுநராக 1992 யூலையில் பதவியேற்றதுடன் 1995 நவெம்பரில் தனது பதவியிலிருந்தும் விலகினார்.

திரு. எச். பீ. திசநாயக்க, கெக்கிறாவ மத்திய கல்லூரியிலும் கோட்டே ஆனந்த சாஸ்திராலயவிலும்  கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து சிங்களத்தில் கலைமானி சிறப்புப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அவரின் பல்கலைக்கழகக் கல்வி நிறைவெய்தியது.

உதவி அரச அதிபராக தனது பதவியை ஆரம்பித்த திரு. எச். பீ. திசநாயக்க அதன் பின்னர் 1964இல் அரச சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். இவர் 1972 – 1974இல் குருநாகலின் அரச அதிபராகப் பணியாற்றியதுடன் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பொதுமுகாமையாளராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் 1974 – 1976 காலப்பகுதியில் சுங்கத்தின் துணைப் பணிப்பாளர் நாயகமாகவும் 1976 இலிருந்து 1987 வரை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார். திரு. திசநாயக்க 1987 – 1989 காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக விளங்கினார். 1989இல் அவர் திறைசேரிக்கான துணைச் செயலாளராக விளங்கினார். துணைச் செயலாளராக விளங்கிய காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக வரக் கூடிய வாய்ப்பினைப் பெற்றார்.

அதன் பின்னர் திரு. திசநாயக்க 1996 – 1998 காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.