திரு. எச்.ஏ. கருணாரத்ன

துணை ஆளுநா்

திரு. கருணாரத்ன மத்திய வங்கியில் விசேடமாக பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் வங்கியினால் கொண்டு நடாத்தப்படுகின்ற ஏனைய முகவர் தொழிற்பாடுகள் ஆகிய விடயப்பரப்புக்களில் 32 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தினைப் பெற்றுள்ளார். துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. கருணாரத்ன ஊழியர் சேம நிதியம், இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் செயலகத் திணைக்களங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பான உதவி ஆளுநர் பதவியினை வகித்ததுடன் நிதியியல் உளவறிதல் பிரிவின் நிருவாகக் கருமங்களையும் மேற்பார்வை செய்தார். இதற்கு மேலதிகமாக, திரு. கருணாரத்ன ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கான செயலாளராகவும் பணியாற்றினார். இவர் நாணயச் சபை ஆலோசனைக் கணக்காய்வுச் சபைக்கான செயலாளராகவும், சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழுச் செயலாளராகவும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுக்கவியல் குழுவின் செயலாளராகவும் தகவல் தெரிவித்தல் கொள்கை செயலகத்தின் பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.

திரு. கருணாரத்ன ஐக்கிய அமெரிக்காவின் ஒஹயோ பல்கலைக்கழகத்தில் பொருளியலில் கலை முதுமானிப் பட்டத்தினையும் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாக விஞ்ஞானமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். திரு. கருணாரத்ன இலங்கை பட்டயக் காணக்காளர் நிறுவனத்தின் இணை உறுப்பினரொருவருமாவார்.

திரு. கருணாரத்ன தற்போது இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் கணக்காய்வுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். திரு. கருணாரத்ன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசேடமாக, ஒதுக்கு முகாமைத்துவம், படுகடன் முகாமைத்துவம், பிணையங்கள் சந்தை, இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் நிதியியல் உளவறிதல் போன்ற துறையில் அவரது பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினூடாக இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களை அடைவதற்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். ஒதுக்கு முகாமைத்துவம், அரசாங்க படுகடன் பிணையங்கள் சந்தை, பெறுதி சந்தைகள் மற்றும் முதனிலை வணிகர் முறைமைகள் ஆகிய தலைப்புக்களில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.