2019 மாச்சில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் நிலவிய தாழ்ந்த தளத்தின் காரணமாக 2019 பெப்புருவரியின் 2.4 சதவீதத்திலிருந்து 2019 மாச்சில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதேவேளையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கமானது 2019 மாச்சில் -2.3 சதவீதம் மற்றும் 7.1 சதவீதங்களைப் பதிவுசெய்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 மாச்சில் 1.7 சதவீதத்தில் மாற்றமின்றியிருந்தது.

மாதாந்த மாற்றங்களைக் கருத்திற்கொள்ளும் போது தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2019 மாச்சில் 0.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதற்கு உணவு வகையிலுள்ள பொருட்களின், குறிப்பாக, அரிசி, தேங்காய் மற்றும் காய்கறிகளின் விலைகளில் அவதானிக்கப்பட்ட விலைக் குறைவு காரணமாக விளங்கியது. எனினும், உணவல்லா வகையில் வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலை; போக்குவரத்து (பெற்றோல் மற்றும் டீசல்); ஆடை மற்றும் காலணி மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளிலுள்ள பொருட்களின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன.

 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, April 23, 2019