வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 நவெம்பர்

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சிக்கு மத்தியிலும் 2020 நவெம்பரில் வெளிநாட்டுத் துறையில் குறைவான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன உள்ளடங்கலாக பல சாதகமான முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டன. அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தமை மற்றும் குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு வணிகப்பொருள் இறக்குமதிகள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையுடன் உள்நாட்டு உற்பத்திச் செயன்முறைகளுக்கான இடைத்தடங்கலின் காரணமாக முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவெம்பரில் வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்று காணப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்கள் நவெம்பரிலும் தொடர்ந்தும் வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கில், அரசாங்கப் பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலும் வெளிநாட்டு முதலீடு 2020 நவெம்பரில் சிறிதளவான தேறிய வெளிப்பாய்ச்சல்கள் பதிவாகின. 2020 நவெம்பர் இறுதியளவில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் மட்டம் ஐ.அ.டொலர் 5.6 பில்லியனாகவிருந்த அதேவேளை 2020 நவெம்பர் மாதகாலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா சிறிதளவு தேய்வடைந்தது.

முழு வடிவம்

Published Date: 

Friday, January 15, 2021