சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வட்டி வீதங்களைக் குறைக்கவும் மற்றும் கடன் பாய்ச்சலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்

இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்கு வீதத்தைக் குறைப்பதன் மூலம் வட்டி வீதங்களை குறைப்பதற்கும் சந்தைத் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (உரிமம் பெற்ற வங்கிகள்) மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் என்பன அதிக வட்டி வீதங்களைக் கடன்களுக்கு அறவிடுவதையும் அதிகப்படியான வட்டி வீதங்களை வைப்புகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் நன்றாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இலங்கையின் உண்மை வட்டி விகிதங்களைப் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியானதாகக் காணப்படுகின்றன.

அதன்படி, நிதியியல் துறையூடாக நாணயக் கொள்கைப் பறிமாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக வைப்புகளுக்கான வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் பொதுவாக கடன் வட்டி வீதங்களை முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வட்டி வீதங்களைக் குறைப்பதனூடாக உண்மை பொருளாதாரத்தில் கடன்பாய்ச்சலை மேம்படுத்துவதற்கும் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி கோருகின்றது.

உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களால் வழங்கப்படும் 3 மாத காலப்பகுதிக்கு குறைவான சேமிப்பு மற்றும் ஏனைய வைப்புகளுக்கான குறைவான சேமிப்பு மற்றும் ஏனைய வைப்புகளுக்கான வட்டி வீதம் துணைநில் வைப்பு வசதி வீதத்துடன் இணைக்கப்படும் அதேவேளை நீண்ட காலப்பகுதிக்குரியவை 364 நாள் திறைசேரி உண்டியல் விகிதத்துடன் இணைக்கப்படும். 18 வயதிற்கு குறைவான பிள்ளைகளுக்குரிய சேமிப்பு வைப்பு மற்றும் மூத்த பிரசைகளுக்குரிய ஒரு ஆண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளுக்கு மேலதிகமாக 50 அடிப்படைப் புள்ளிகள் வரை உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் வட்டி வழங்கலாம். வங்கியல்லா நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட படுகடன் சாதனங்களுக்கு உயர்ந்தபட்ச வட்டி வீதங்களுக்குட்பட்டவை. இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் போட்டித்தன்மையுடையதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது வைப்பாளர்களுக்கு கணிசமான உண்மை வருமானத்தை வழங்கும்.

இவ்வாறான நடவடிக்கைகள், நிதியியல் துறையின் மேலதிக நிதிச் செலவினங்களைக் குறைப்பதடன் மத்திய வங்கி, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான கடன் வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு எதிர்பார்க்கிறது. 2018 நவெம்பர் மற்றும் மாச்சு மாதங்களில் நியதி ஒதுக்கு வீதம் 250 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டதன் மூலம் நிதிச் செலவினங்கள் ஏற்கனவே குறைந்துள்ளது. இது வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கிடையிலான வட்டி விகித இடைவெளியைக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய வங்கி வங்கி வட்டி விகிதங்களின் நடத்தையை நெருக்கமாக கண்காணிக்கும் அதேவேளை எதிர்காலத்தில் பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுக்கும். 

Published Date: 

Monday, April 29, 2019