கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 யூலையில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூனின் 3.9 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 4.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 யூலையில் நிலவிய தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கங்களுடன் சேர்ந்து உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. உணவுப் பணவீக்கம்  (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 10.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 யூனின் 4.7 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 4.8 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

முழு வடிவம்

Published Date: 

Friday, July 31, 2020