இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - ஒத்தோபா் 2018

தயாரிப்பு துறை கொ.மு.சுவின் அனைத்து துணைச்சுட்டெண்களும்  செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் நடுநிலையான 50.0இற்கு மேலான பெறுமதியை பதிவு செய்து ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காண்பித்தது. ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடானது பிரதானமாக புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகளிலான மேம்பாடொன்றினால்உந்தப்பட்டது. இதற்கு, விசேடமாக உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் பருவகால கேள்வி மீதான சாதகமான தோற்றப்பாடு செல்வாக்கு செலுத்தியிருந்தது. பருவகால போக்குடன் உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் தொழில்நிலையானது அதிகரித்திருந்த போதிலும், ஒட்டுமொத்த தொழில்நிலையானது மெதுவடைந்திருந்தது. இதற்கு,புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு சந்தையிலிருந்து தொழிலாளர்களை தேர்வு செய்வதில் உள்ள சிக்கல்கள் பிரதானமாக சான்று கூறின.

இதேவேளையில், வரவிருக்கின்ற பருவகாலத்திற்க்கான முன்னேற்பாடுகளுக்காக தளபாட தயாரிப்பு நடவடிக்கைகளில் தேக்கப்பட்ட இருப்புகளின் காரணமாக கொள்வனவுகளின் இருப்புகளில் மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது. அதேவேளை, நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இச்சந்தர்ப்பத்தில், நீட்சியடைந்த நிரம்பலர் நேரமானது, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சமமான வீதத்தினால் நீட்சியடைந்திருந்ததுடன், இதற்கு உள்ளீட்டு பொருட்களிலான தட்டுப்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற உள்நாட்டு ரூபாவின் உறுதிப்பாட்டுடன் உள்ளீட்டு பொருட்களின் விலையில் மேலதிக அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு மூலப்பொருள் கிடைப்பனவு நேரத்தினை வேண்டுமென்றே அதிகரிப்பதனூடாக பிரதானமாக உந்தப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, November 15, 2018