இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 யூன்

நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்தியதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளின் இயல்புநிலையிலிருந்து நன்மையடைந்து தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 மேயுடன் ஒப்பிடுகையில் 18.0 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட மாதத்திற்கு மாத அதிகரிப்புடன் 67.3 இனைப் பதிவுசெய்து 2020 யூனில் கணிசமாக அதிகரித்தது.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் இவ்வதிகரிப்பானது விசேடமாக, உள்நாட்டு கேள்வி மூலம் பிரதானமாக துணையளிக்கப்பட்டு முன்னைய மாதத்தினைவிட அதிகமான புதிய கட்டளைகளைப் பெற்று யூன் மாதம் முழுவதும் தமது தொழிற்சாலைகள் முழுமையாக தொழிற்பட்டன என்பதனை பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டியிருந்த உணவு மற்றும் குடிபானங்கள் அத்துடன் புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துணை வகைகளின் தயாரித்தலின் உற்பத்தி, புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலையின் குறிப்பிடத்தக்க மேம்பாட்டின் மூலம் துணையளிக்கப்பட்டிருந்தது. மாதகாலப்பகுதியின் போது புதிய கட்டளைகளின் வளர்ச்சியுடன் இணைந்து உற்பத்தி மற்றும் கொள்வனவுகள் இருப்பு என்பனவும் உயர்வான வீதத்தில் அதிகரித்தன.

அதிகரித்த தயாரிப்பு நடவடிக்கைகள் மூலம் தொழில்நிலை துணைச் சுட்டெண், 50 - அடிப்படை அளவினைத் தாண்டி அதிகரித்தது. கொவிட்-19 நோய்தொற்றானது உலகளாவிய விநியோகத்தினை மோசமாகப் பாதித்தமையினால் காலப்பகுதியின் போது நிரம்பலர் விநியோக நேரம் மெதுவான வேகத்திற்கு மத்தியிலும் தொடர்ந்தும் நீட்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, July 15, 2020