இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 நவெம்பர்

தயாரிப்புத் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 நவெம்பரில் விரிவடைந்த வேளையில், பணிகள் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கி திருப்பமடைந்த போதிலும் இன்னும் குறிப்பிடத்தக்களவு மட்டத்திற்கு கீழாகவே காணப்படுகிறது.

தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது 2020 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் 17.3 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2020 நவெம்பரில் 57.6 இற்கு உயர்வடைந்தது. புதிய கட்டளைகளில் குறிப்பாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் அத்துடன் உணவு மற்றும் குடிபானத் துறைகளின் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கணிசமான மேம்படுதலுக்கு பிரதானமாக பங்களித்துள்ளது. உற்பத்தித் துணைச் சுட்டெண்ணில், பிரதானமாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் அத்துடன் உலோகமல்லாத கனிம உற்பத்திகள் துறைகளின் தயாரித்தலின் விளைவான  அதிகரிப்பானது அனைத்துத் துறைகள் முழுவதும் நிரம்பலர்களின் விநியோக நேரத்தின் வீழ்ச்சியடைதலுடன் ஒன்றிணைந்து தயாரிப்பு கொ.மு.சுட்டெண்னின் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்தது.

சுருக்க எல்லையினுள் காணப்பட்ட பணிகள் துறை கொ.மு.சுட்டெண், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 நவெம்பரில் 48.8 இற்கு அதிகரித்து 2020 நவெம்பரில் பணிகள் துறை பொருளாதார நடவடிக்கைகளில் மெதுவான வீழ்ச்சியொன்றினைப் பிரதிபலித்தது. பணிகள் துறை நடவடிக்கைகளில் இச்சீர்குலைவிற்கு பணிகள் துறை கொ.மு.சுட்டெண்ணின் தொழில் நடவடிக்கைகள் மற்றும் தொழில்நிலை என்பவற்றில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகள் துணையளித்தன.

முழு வடிவம்

Published Date: 

Tuesday, December 15, 2020