இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 திசெம்பர்

2019 திசெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்கள் என்பனவற்றில் ஏற்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். 

அனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும், 2019 நவெம்பருடன் ஒப்பிடுகையில் இன்னமும் மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவை தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் துறையின் மெதுவான தன்மையே காரணமாகும். தொழில்நிலையில், குறிப்பாக அணியும் ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்களவு மெதுவான போக்கு காணப்பட்டமைக்குச் சாத்தியமான ஊழியர்கள் சிறந்த ஊதியங்களுக்காக பருவகாலத் தொழில்வாய்ப்புக்களுக்கு அவர்கள் கவரப்பட்டமையே காரணமாகும். தொழில்நிலையில் காணப்பட்ட மெதுவான போக்கு உற்பத்திக் குறைப்பில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தியது. 

 

முழுவடிவம்

Published Date: 

Thursday, January 16, 2020